சென்னையில் தொடரும் கொள்ளைச் சம்பவங்கள்
சென்னை:
சென்னையில் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன. லேட்டஸ்டாக எழும்பூர் பகுதியில் உள்ள ஒருதொழிலதிபரின் வீட்டில் ரூ.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் பாந்தியன் சாலையில் வசிப்பவர் பிலிப்ஸ் பெரிஸ். இவர் கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்குசென்றிருந்தார். சமீபத்தில் சென்னை திரும்பினார். அதன் பிறகு குடும்பத்துடன் ஊட்டிக்குப் போய் விட்டார்.
இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) காலை பிலிப்ஸ் தனது குடும்பத்தினருடன் சென்னை திரும்பினார். அப்போதுவீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பிலிப்ஸ் குடும்பத்தினர் அதிர்ந்தனர்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, 50 சவரன் நகை, 1 லட்சம் அமெரிக்க டாலர்கள், ரூ.50,000 ரொக்கப் பணம்உள்ளிட்ட மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை திருடர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து உடனடியாக போலீஸில் புகார் செய்தார் பிலிப்ஸ். போலீஸ் இணை கமிஷனர் ஜார்ஜ் தலைமையில்போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பாந்தியன் சாலை என்பது எழும்பூரின் முக்கியமான சாலை மட்டுமில்லாமல் எப்போதும் ஆட்கள் நடமாட்டம்உள்ள சாலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில்தான் பெசன்ட் நிகர் பகுதியில் வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள் வங்கி அதிகாரியைக் கொன்று விட்டுபணத்தைக் கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சி தோல்வியுற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமைகூட திருவான்மியூரில் ஒரு வங்கி அதிகாரியின் வீட்டில் தமிழ்ப் புத்தாண்டு பூஜைக்காகசாமிப் படத்தின் முன் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் பணத்தைக் கொள்ளையர்கள் அள்ளிக் கொண்டுஓடிவிட்டனர்.
தொடரும் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் சென்னை மாநகர மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications