"கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக நினைக்கலாமா?"
சென்னை:
""லோக்கல் திருடன் சந்தனக் கடத்தல் வீரப்பனையே பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கடல் கடந்து போய்விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பிடிக்க ஜெயலலிதா நினைப்பது கேலிக்கூத்தாகஉள்ளது"" என்று தமிழக தேசியவாத காங்கிரசின் தலைவரான ஜி.பி. சாரதி கூறியுள்ளார்.
இதுகுறித்து சாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராஜிவ் காந்தி வெறும் பிரதமராக மட்டும் இருந்ததில்லை. அவர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார். ஆனால்காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கேரளா, கர்நாடகா உள்ளிட்ட எந்த மாநில சட்டசபையிலும் பிரபாகரனை ஒப்படைக்கவேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
தமிழகத்தில் மட்டும் அவசரக் கோலத்தில் இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக விரித்தவலையில் காங்கிரசும், தமாகாவும் விழுந்து விட்டதை நினைத்து வருத்தமாக இருக்கிறது.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் மூலம் இலங்கைத் தமிழர்களின் கனவாகவே இருந்து வரும்அமைதித் தீர்வு என்பது பாதிக்கப்படும்.
கன்னட நடிகர் ராஜ்குமாரைக் காட்டுக்குள் கொண்டு போய் வைத்திருந்த வீரப்பனைப் பிடித்துக் காட்டுவோம் என்றுஜெயலலிதா சவால் விட்டார். இப்போது அவர்களது ஆட்சிதான் நடக்கிறது. தேடுதல் வேட்டையும் நடக்கிறது,ஆயினும் வீரப்பனைப் பிடிக்கும் வழியைத்தான் காணோம்.
இந்த நிலையில் பிரபாகரனை பிடிக்க நினைப்பது, "கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறிவைகுண்டம் போக நினைத்த" கதையாக உள்ளது என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் சாரதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications