சென்னை கொள்ளையர்களை சுட்டுப் பிடிக்க உத்தரவு
சென்னை:
சென்னை நகரில் அட்டகாசம் செய்து வரும் கொள்ளையர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் ஆணையர் விஜயக்குமார்தெரிவித்துள்ளார்.
சென்னை நகரில் கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். தினசரி ஒரு பெரிய கொள்ளைச் சம்பவம் நடப்பதுசாதாரண செயலாகி விட்டது. வியாழக்கிழமை கூட சென்னை அருகே உள்ள தாம்பரம் மற்றும் திருவொற்றியூல் இரண்டு நகைக் கடைகளில் கொள்ளைச்சம்பவம் நடந்துள்ளன.
சென்னை நகர கொள்ளைச் சம்பவங்கள் குறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாநகர போலீஸ் கமிஷனர் விஜயக்குமாரிடம்நிருபர்கள் கேட்டபோது, சென்னையில் மட்டுமே கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நடப்பதாகக் கூறுவதை ஏற்க முடியாது. மற்ற பெருநகரங்களானமும்பை, டெல்லியுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவுதான்.
சென்னை போன்ற பெரிய நகரங்களில் குற்றச் செயல்களை தடுப்பது இயலாத காரியம். முதுகுக்குப் பின் மறைந்து இருந்து கொண்டு தவறு செய்பவர்களைஎப்படிக் கண்டுபிடிப்பது. சென்னை நகரில் செயல்பட்டு வரும் கொள்ளைக் கும்பல்களைப் பிடிக்க 300க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுசெயல்படுகின்றன. செங்கை கிழக்கு மாவட்ட காவல்துறையினரும் இந்தப் பணியில் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
தேவைப்பட்டால் குற்றவாளிகளை சுட்டுப் பிடிக்கவும் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் உயிரையும், உடமைகளையும்பாதுகாக்க துப்பாக்கியால் சுட்டும் கொள்ளையர்கள் பிடிக்கப்படுவர் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications