போதை ஊசிகளைக் கடத்திய கேரள வாலிபர் கைது
கோயம்புத்தூர்:
டெல்லியிலிருந்து 720 போதை ஊசிகளைக் கடத்த முயன்ற கேரள வாலிபரை கோயம்புத்தூர் பஸ் நிலையத்தில்போலீசார் இன்று கைது செய்தனர்.
கேரளாவில், குறிப்பாக கொச்சியில் உள்ள கல்லூரி மாணவ-மாணவிகளுக்குப் போதைப் பொருட்களை ஒருவாலிபர் தொடர்ந்து சப்ளை செய்து வருவதாகப் போலீசாருக்குத் தகவல் வந்தது.
இந்நிலையில் அந்த வாலிபர் பெங்களூரிலிருந்து கோயம்புத்தூர் வழியாகப் போதைப் பொருட்களைக் கடத்திக்கொண்டிருப்பதாகவும் மேலும் ஒரு தகவல் வந்ததையடுத்து கோயம்புத்தூர் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
அந்த வாலிபரைப் பிடிப்பதற்காக தனிப்படைப் போலீசார் கோயம்புத்தூர் பஸ் நிலையத்தில் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து பெங்களூரிலிருந்து கோயம்புத்தூருக்கு இன்று காலை வந்த ஒரு பஸ்சை சோதனையிட்டபோது,அப்துல் நாசர் என்ற வாலிபர் பிடிபட்டார்.
கொச்சியைச் சேர்ந்த அப்துல் நாசரிடமிருந்து ரூ.10,000 மதிப்புள்ள 720 போதை ஊசிகளையும் போலீசார்கைப்பற்றினர். ஆனால் கள்ள மார்க்கெட்டில் இவற்றை ரூ.1 லட்சம் வரை விற்க முடியுமாம்.
டெல்லியிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்தப் போதை ஊசிகளை கொச்சியிலுள்ள கல்லூரிகளில் படிக்கும்மாணவ-மாணவிகளுக்கு விற்பதற்காகக் கொண்டு செல்லப்பட்டபோதுதான் அந்த நபரை கோயம்புத்தூர்போலீசார் கைது செய்தனர்.
அப்துல் நாசர் பின்னர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். போலீசார் மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.












Click it and Unblock the Notifications