கடனை வசூலிக்க கம்ப்யூட்டர் நிறுவனத்தை கொள்ளையடித்த நிதி நிறுவனம்
சென்னை:
கொடுத்த கடனைத் திருப்பி வாங்குவதற்காக சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர்நிறுவனத்திற்குள் புகுந்த கோயம்புத்தூரைச் சேர்ந்த சக்தி பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம், அங்கிருந்தகம்ப்யூட்டர்கள் மற்றும் பிற பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது.
சென்னை மாநகரில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்றாகி கொள்ளை மாநகரமாகவே மாறிவிட்டது. எங்குபார்த்தாலும் கொலை அல்லது கொள்ளையாக இருக்கிறது.
கொடுத்த கடன் திரும்ப வரவில்லை என்பதற்காக அடியாட்களை அனுப்பி ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தையேகோயம்புத்தூரைச் சேர்ந்த நிதி நிறுவனம் கொள்ளை அடித்துள்ளது.
சென்னை மக்களைப் பெரும் திகைப்புக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தில் கொள்ளை அடித்துச் செல்லப்பட்டபொருட்கள் அனைத்தும் இரவோடு இரவாக மீட்கப்பட்டன.
நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ளது ஐ.ஐ.எஸ்.டி. இன்போசிஸ் என்ற கம்ப்யூட்டர் நிறுவனம். அமெரிக்ககம்ப்யூட்டர் நிறுவனங்களுடன் பல்வேறு வர்த்தக தொடர்புகளைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.
ஏராளமானோர் இதில் பணியாற்றி வருகின்றனர். வியாழக்கிழமை இரவு சிலர் பணியில் இருந்தபோது 3 பேர்டிப்-டாப் உடையில் அங்கு வந்தனர்.
பணியில் இருந்த ஊழியர்களிடம், ""நாங்கள் சி.பி.ஐ. அதிகாரிகள். உங்கள் நிறுவனம் குறித்து மோசடிப் புகார்வந்துள்ளது. விசாரணைக்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்"" என்று கூறி அனைவரையும் ஒரு அறைக்குள்அழைத்துச் சென்று அமர வைத்தனர்.
சோதனை முடியும் வரை யாரும் வெளியில் வரக் கூடாது என்று அவர்கள் உத்தரவிட்டனர்.
பின்னர் கதவை வெளியில் இருந்து பூட்டிய அந்த டிப்-டாப் ஆசாமிகள், அந்த நிறுவனத்தில் இருந்த 19கம்ப்யூட்டர்கள், பேக்ஸ் மெஷின்கள், மோடம்கள், பிரிண்டர்கள், டிவி, லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றைத்தாங்கள் கொண்டு வந்திருந்த லாரியில் ஏற்றினர். இந்தப் பொருட்களின் மதிப்பு ரூ.15 லட்சம் என்று தெரிகிறது.
நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் குழம்பிப் போன ஊழியர்கள் கதவை உடைத்துத் திறந்து வெளியேவந்தனர். தங்களது நிறுவனமே மொத்தமாகக் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போன அவர்கள்நுங்கம்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்தனர்.
போலீசார் விரைவாக நடவடிக்கையில் இறங்கினர். அப்போது கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும்அடையாறு பகுதியில் ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
போலீசார் அங்கு விரைந்தபோது, அது கோவையைச் சேர்ந்த சக்தி பைனான்ஸ் என்ற நிதி நறுவனத்திற்குச்சொந்தமான ஓய்வு விடுதி என்று தெரிய வந்தது.
பொருட்களைக் கைப்பற்றிய போலீசார் நடத்திய தீவிர விசாரணையின்போது, இந்த சக்தி நிதி நிறுவனத்திடம்ஐ.ஐ.எஸ்.டி. நிறுவனம் கடன் வாங்கியுள்ளது. அதைத் திருப்பிச் செலுத்தாததால் அடியாட்களை வைத்துகம்ப்யூட்டர் நிறுவனத்தில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வரச் செய்துள்ளது இந்த சக்தி நிதி நிறுவனம்எனத் தெரிய வந்தது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி போலீஸ் கமிஷனர் விஜயக்குமார் கூறுகையில்,
கடன் பாக்கிக்காக அடியாட்களை வைத்து இப்படி செய்வது சட்ட விரோதமாகும். சட்டப்பூர்வமானநடவடிக்கையில்தான் நிதி நிறுவனங்கள் ஈடுபட வேண்டும்.
இதுபோல வேறு ஏதாவது நிறுவனத்திலும் சக்தி நிதி நிறுவனம் ஈடுபட்டுள்ளதா என்பது குறித்த விசாரித்துவருகிறோம்.
கம்ப்யூட்டர் நிறுவனத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் போல நடித்து கொள்ளை அடித்துச் சென்றவர்கள் தற்போதுகோயம்புத்தூர் சென்று விட்டனர். அவர்களைப் பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர் என்றார் விஜயகுமார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications