குஜராத்: செளராஷ்டிராவிலும் வன்முறை பரவியது

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

குஜராத்தில் செளராஷ்டிரா பகுதியிலும் நேற்று திடீரென வன்முறை வெடித்தது.

கடந்த இரண்டு மாதங்களில் குஜராத் வன்முறைக்கு 1,000 பேருக்கு மேல் பலியாகிவிட்டபோதிலும், இன்னும்வன்முறை நீடித்துக் கொண்டுதான் உள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் 41 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் அகமதாபாத் நகரைச் சுற்றியே நிகழ்ந்து வந்த வன்முறை, செளராஷ்டிராவிற்கும் பரவியது.

செளராஷ்டிரா பகுதியில் உள்ள முக்கிய நகரமான பவ்நகரில் நேற்று வன்முறைச் சம்பவங்கள் தாண்டவமாடின.இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட கடும் மோதலில் வீடுகள், கடைகள், சாலையில் சென்று கொண்டிருந்தவாகனங்கள் தீக்கிரையாகின.

இதையடுத்து அந்நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அங்கு ஏராளமான ராணுவத்தினரும்குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே வன்முறை நீடித்து வரும் அகமதாபாத்தில் நேற்றிரவு வன்முறைக் கும்பல் மீது போலீசார் நடத்தியதுப்பாக்கிச் சூட்டில், ஆறு பேர் பலத்த காயமடைந்தனர்.

கடந்த வார வன்முறையின்போது பலத்த காயமடைந்த இரண்டு பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.

அகமதாபாத்தின் முக்கியப் பகுதியான கோம்திபூரில் வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதையடுத்து அங்குஊரடங்கு உத்தரவும் தொடர்ந்து அமலில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+