கொதிக்கும் எண்ணையால் கணவனுக்கு அபிஷேகம் செய்த பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெண்களை ஏமாற்றி நிர்வாண பூஜை நடத்துவதாக கூறி அவர்களிடம் தவறாக நடந்த கணவன் மீது கொதிக்கும்எண்ணையை ஊற்றி கொலை செய்ய முயற்சித்தார் மனைவி. அவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் துப்புறவுத் தொழிலாளியாக இருந்து வருபவர் கஸ்தூரி. இவரதுகணவர் கண்ணன். இருவரும் விமான நிலைய தொழிலாளர்களுக்கான குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.

மனைவியின் சம்பாத்தியத்தில் சாப்பிட்டு விட்டு ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளார் கண்ணன். இந்த நிலையில்தனக்கென கையில் பணம் இருக்க வேண்டும் என்பதற்காக குறுக்கு புத்தியுடன் அவர் யோசித்தார்.

தனக்கு மந்திர, தந்திரங்கள் தெரியும் என்றும் ஜோதிடம் பார்க்கத் தெயும் என்றும் அக்கம் பக்கத்தில் தகவலைப்பரப்பிய கண்ணன். குடும்பப் பிரச்சினைகள், தோஷ நிவர்த்தி ஆகியவற்றை செய்வதாகவும் கூறி வந்தார்.

கண்ணனின் வார்த்தைகளை நம்பிய அப்பகுதிப் பெண்கள் அவரை நாடி வந்துள்ளனர். அவர்களிடம் அந்த பூஜை,இந்த பூஜை என கூறி பணம்பார்த்துள்ளார் அவர்.

வெறும் பணத்துடன் நிற்காமல், அழகான இளம் பெண்கள் மீது கண் வைக்க ஆரம்பித்தார் கண்ணன். அவர்களிடம்உங்களது குடும்பப் பிரச்சினைகள் தீர வேண்டுமானால் பெளர்னமி தினத்தன்று இரவில், உடலில் துணியில்லாமல்பிரார்த்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இப்படிச் செய்யாவிட்டால் பிரச்சினைகள் பல்கிப் பெருகும் என்றும்அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இதை நம்பிய சில பெண்கள் பூஜைக்கு சம்மதித்துள்ளனர். தனது மனைவி இரவுப் பணிக்குச் செல்லும் நாட்களாகப்பார்த்து அவர்களை தன் வீட்டுக்கு கண்ணன் வரச் சொல்லி, பின்னர் அவர்களை நிர்வாணப்படுத்தி, அவர்களுக்குகுடிப்பதற்கு மயக்க மருந்து கொடுத்து, அவர்கள் மயங்கிய பின் முறைகேடாக நடந்துள்ளார்.

இந்தச் செய்திகள் அனைத்தும் கஸ்தூரிக்கு ஒரு நாள் தெரிய வந்தது. இதையடுத்து கோபம் கொண்ட அவர்கண்ணனிடம் சண்டை போட்டார். ஆனால் அதை கண்ணன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.

இதனால் விரக்தியுற்ற கஸ்தூரி, சம்பவத்தன்று, கண்ணன் இரவில் தூங்கிக் கொண்டிருக்கையில், சட்டியில்எண்ணையைக் கொதிக்க வைத்து அதை கண்ணனின் இடுப்புக்குக் கீழே ஊற்றி "அபிஷேகம்" செய்தார்.

கொதிக்கும் எண்ணையில் சிக்கி கண்ணனின் இடுப்புப் பகுதிக்கு கீழே மோசமாகச் சிதைந்து போனது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பரிதாபப்பட்டு கண்ணனை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர்.

தகவல் அறிந்தவுடன் விமான நிலைய போலீஸார் விரைந்து வந்து கஸ்தூரியைக் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+