"பினாமி" விவகாரம்: அரசியலை விட்டே விலகத் தயார் - மாறன்
சென்னை:
தனக்கு "பினாமி" இருப்பதை தமிழக முதல்வர் ஜெயலலிதா நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தான் தயார்என்று மத்திய அமைச்சர் முரசொலி மாறன் கூறினார்.
"இந்தியா சிமெண்ட்ஸ்" நிறுவனத்தின் அதிபரான சீனிவாசன் என்பவர் மாறனின் "பினாமி" என்று சட்டசபையில்சமீபத்தில் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட மறுப்பு அறிக்கையில் மாறன் கூறியுள்ளதாவது:
எனக்கு ஒரு "பினாமி" இருப்பதாக ஜெயலலிதா கூறியிருப்பது முற்றிலும் அடிப்படையற்றது மட்டுமல்ல;அணுவளவும் உண்மை கலவாத அபத்தக் கற்பனையாகும்.
"தான் திருடி, பிறரை நம்பாள்" என்று தமிழில் உள்ள ஒரு பழமொழிதான் என் நினைவுக்கு வருகிறது. எனக்கு"பினாமி" உறவுப் பழக்கமோ வேறு எந்தச் செயற்கை உறவுப் பழக்கமோ கிடையாது.
மனநோய்ப் பிரச்சனைகளிலிருந்து முற்றிலும் விடுபடாதவர்களால் மட்டுமே இத்தகைய அடிப்படையற்ற அதீதக்கற்பனைகளை நினைக்கவும் சொல்லவும் முடியும்.
பொதுவாக இன்றைய தமிழக அரசியல் நிலை பற்றிக் கூற வேண்டுமானால், அது மிகவும் அழுக்கானதாகவும்கேவலமானதாகவும் ஆகிவிட்டது. இதை நடுநிலையாளர்கள் நன்கு உணர்வார்கள்.
எனக்கு அதுபோன்ற "பினாமி" இருப்பதாக ஜெயலலிதா நீரூபித்தால் நான் பொது வாழ்வை விட்டே விலகிக்கொள்ளத் தயார். அவரும் தயாரா?
தமிழகத்தின் ஆக்கப் பணிகளிலும் மக்கள் நல்வாழ்வுப் பணிகளிலும் இனிமேலாவது பொறுப்பில் இருப்பவர்கள்தங்களுடைய முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும்.
மன நோயாளியைப் போலப் பிதற்றாமல் இருப்பதே நல்லது என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் மாறன்.












Click it and Unblock the Notifications