மே 10ம் தேதியே சட்டசபை கூட்டத் தொடர் முடிவு
சென்னை:
இடைத் தேர்தலையொட்டி வரும் மே 25ம் தேதிக்குப் பதிலாக மே 10ம் தேதியே தமிழக சட்டசபையின் பட்ஜெட்கூட்டத் தொடர் முடிவடையவுள்ளதால், இன்று (திங்கள்கிழமை) முதல் மாலையிலும் சபை கூடும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 9ம் தேதி ஆளுநர் ராமமோகன் ராவ் உரையுடன் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர்தொடங்கியது. மார்ச் 27ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் மே 25ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நீடிக்கும் என்றும் காலை நேரத்தில் மட்டும் சட்டசபைகூட்டம் நடக்கும் என்றும் முதலில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் மே 31ம்தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து சட்டசபைக் கூட்டத் தொடரை வேகமாக முடித்து விட தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி வரும் மே 10ம் தேதி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடையும் என்றும் இன்று முதல்மாலையிலும் 4.30 மணிக்கு சட்டசபை கூடும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications