யாருடன் கூட்டணி? - மே 4ல் பாஜக அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபை இடைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து வரும் சனிக்கிழமை முடிவுஅறிவிக்கப்படும் என்று மத்திய இளைஞர் நலத்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து முதல் சுற்று ஆய்வு முடிந்துள்ளது. வரும் சனிக்கிழமை கட்சியின்பணிக் குழு கூடி இறுதி முடிவு எடுக்கவுள்ளது.
தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளுடனும் சுமூக உறவை பாரதீய ஜனதாக் கட்சி வைத்துள்ளது. திமுகவை விட்டுவிட்டு அதிமுகவுடன் உறவு வைத்துக் கொள்ள நாங்கள் முயற்சிப்பதாகக் கூறப்படும் செய்திகளில்உண்மையில்லை.
சில விஷயங்களில் பாஜக அரசுக்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது. அதை வரவேற்கிறோம். அதைத் தவிரஅதிமுகவுடன் எங்களுக்கு எந்தவிதமான உறவும் இல்லை என்றார் ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications