வரதட்சணையால் நின்றது திருமணம்: மணமகன் உள்பட 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டதால் மணமகன் உள்பட 3 பேரைப் போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரத்தை அடுத்துள்ளது அய்யங்கார் குளம். இங்குள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர்சக்கரபாணி ரெட்டி. இவருக்கு அனுராதா என்ற ஒரே மகள் உள்ளார்.

தனியார் பொறியியல் கல்லூரியில் ஆசிரியையாக வேலை பார்த்து வரும் அனுராதாவுக்கும், தாம்பரம் காமராஜர்தெருவைச் சேர்ந்த பூபாலன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

சென்னை ஐ.ஐ.டியில் வேலை பார்த்து வருகிறார் பூபாலன். திருமணம் இன்று (திங்கள்கிழமை) நடப்பதாக இருந்தது.வரதட்சணையாக ரூ.1லட்சம் கொடுப்பதாகப் பேசி முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பூபாலனின் அக்கா காஞ்சனாவும் அவரது கணவர் ஜெயராமனும்சக்ரபாணி வீட்டுக்கு போன் போட்டுப் பேசினர்.

அப்போது, சென்னையில் முக்கியமான இடத்தில் ரூ.40 லட்சம் செலவில் வீடு வாங்கித் தர வேண்டும் என்றும்வைரத் தோடு, வைர மூக்குத்தி மற்றும் 5 கிலோ வெள்ளிப் பாத்திரங்கள் வாங்கித் தர வேண்டும் என்றும் கூறியஜெயராமன்-காஞ்சனா தம்பதி, இவற்றையெல்லாம் செய்யாவிட்டால் திங்கள்கிழமை கல்யாணம் நடக்காது என்றுகண்டிப்பாக கூறி விட்டு போனை வைத்து விட்டனர்.

அதிர்ந்து போன சக்கரபாணி ரெட்டி, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார்செய்தார்.

இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பூபாலன், காஞ்சனா மற்றும் ஜெயராமன் ஆகிய மூவரையும் கைதுசெய்தனர். இதையடுத்து திங்கள்கிழமை நடப்பதாக இருந்த திருமணம் நின்று போனது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+