தொடரும் குஜராத் வன்முறைக்கு மேலும் 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

குஜராத்தில் நேற்று இரவு நடந்த வன்முறைச் சம்பங்களில் 2 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் படுகாயமடைந்தனர்.

அகமதாபாத்தில் கலுப்பூர் பகுதியில் ஒரு வன்முறைக் கும்பல் கல்வீச்சில் ஈடுபட்டது. இதையடுத்து போலீசார்அக்கும்பல் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.

இதற்கிடையே இதே பகுதியின் மற்றொரு புறத்தில் கலவரக் கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டுகளை சராமாரியாகஎறிய ஆரம்பித்தது.

இந்தக் குண்டுகள் பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டார். ஏழு பேருக்குப்பயங்கரமான தீக்காயங்கள் ஏற்பட்டன.

இதற்கிடையே மணிநகரம் பகுதியில் வன்முறைக்கு ஐந்து பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நேற்று மட்டும் ஏழுபேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏப்ரல் 21ம் தேதி முதல் இதுவரை 56 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பெரும் வன்முறை மூண்டதையடுத்து கலுப்பூர், கோம்திபூர் மற்றும் வேஜால்பூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்துஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+