வாணியம்பாடியில் 3 நாள் பிரச்சாரம் செய்கிறார் ஜெ.
வாணியம்பாடி:
மே 31ஆம் தேதி நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்காக, வாணியம்பாடி தொகுதியில் முதவ்வர் ஜெயலலிதா மே2ஆம் வாரத்தில் 3 நாள் தொடர் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
முன்னாள் முதல்வரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள் மற்றும்போலீஸ் உயர் அதிகாரிகள் பிரச்சாரப் பணிகளைத் தொடங்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அரசினர் மாளிகையில் தங்கி பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. எனவே, ஜெயலலிதாதனியார் இடத்தில் தங்கி பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளார். இதனால் ஜெயலலிதாவின்பாதுகாப்பு கருதி,அவரை எங்கு தங்க வைக்கலாம் என்பது குறித்து தீவிரமாக திட்டம் தீட்டி வருகின்றனர்.
வாணியம்பாடி தொகுதியில் உள்ள ஆம்பூர் நகரில் போதுமான வசதிகள் இருந்தாலும், ஜெயலலிதாவின் பாதுகாப்புகருதி அவரை நகரினுள் தங்க வைக்க போலீஸ் அதிகாரிகள் தயங்குகின்றனர்.
இருப்பினும் ஆம்பூரிலிருந்து வாணியம்பாடி எல்லை முடியும் வரை உள்ள பங்களாக்களிள் பட்டியலை தயார்செய்து, அதில் 5 பங்களாக்களைத் தேர்வு செய்ததுள்ளனர். இதில் தோல் தொழிற்சாலை விருந்தினர்மாளிகையிலேயே அவர் தங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம்பூரிலிருந்து 40 நிமிட பயண தூரமுள்ள வேலூரிலும் ஜெயலலிதா தங்கலாம் என்றும் கருதப்படுகிறது.
வாணியம்பாடி உள்ளிட்ட மூன்று சட்டசபைத் தொகுதிகளிலுமே அதிமுக போட்டியிடும் என்று ஜெயலலிதாசமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications