குஜராத் பிரச்சனை: பாஜகவுக்கே ஓட்டளிப்போம் - கருணாநிதி
சென்னை:
குஜராத் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை எதிர்த்துபாஜக அரசையே ஆதரித்து ஓட்டளிப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று கூறினார்.
சென்னை-அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக எம்.எல்.ஏக்களின் கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்களிடம்கருணாநிதி கூறியதாவது:
குஜராத்தில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் கவலை தரும் விதமாகவே அமைந்துள்ளன. இது தொடர்பாகஎதிர்க் கட்சிகள் கொண்டு வந்துள்ள தீர்மானங்களையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனாலும் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதால், பாஜகவுக்கு ஆதரவாகத்தான் நாங்கள்செயல்படுவோம்.
குஜராத் விவகாரம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் கொண்டு வந்துள்ள தீர்மானத்தின்மீது, விவாதத்துடன் கூடியஓட்டெடுப்பு நடக்கும்போது, பாஜகவுக்கே எங்கள் திமுக கட்சி ஓட்டளிக்கும்.
சிறுபான்மையின மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கையில்சிறு கீறல் விழவும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications