பாலசிங்கம் சென்ற விமானத்தை சுட்டுத் தள்ள முயற்சி?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் சென்ற கடல் விமானத்தைக் கடந்த வாரம்இலங்கை விமானப் படை விமானங்கள் சுட்டுத் தள்ள முயற்சி செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தன்னுடைய விசாக் காலம் முடிவடைந்ததையடுத்து, பாலசிங்கம் தன் மனைவியுடன் இலங்கையை விட்டு கடல்விமானம் மூலம் கடந்த 24ம் தேதி மாலத்தீவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

திரிகோணமலை கடல்பகுதியில் அவ்விமானம் சென்று கொண்டிருந்தபோது, கடலில் சென்று கொண்டிருந்தகடற்புலிகளின் படகுகளை நோக்கி தாழ்வாகப் பறந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இலங்கையின் விமானப்படை விமானங்கள் பாலசிங்கத்தின் விமானத்தைச் சுட முயற்சித்ததாகக்கூறப்படுகிறது.

வன்னி பகுதியிலிருந்து நேரடியாக மாலத்தீவுக்குச் செல்ல வேண்டிய இந்தக் கடல் விமானம் திரிகோணமலைப்பகுதிக்கு வந்து ஏன் வட்டமடித்துச் செல்கிறது என்று இலங்கை கடற்படை குழம்ப ஆரம்பித்ததையடுத்தே அதைச்சுட்டுத் தள்ள முயற்சி செய்யப்பட்டது.

இந்தச் சமயத்தில்தான் புலிகளின் 3 படகுகளைக் கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், 40 கடற்புலிகளையும்கைது செய்தனர். இதையடுத்து திரிகோணமலைப் பகுதியில் தங்களுடைய பலத்தைக் காட்டுவதற்காகவேஅப்பகுதியில் கடல் விமானம் பறந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

பாலசிங்கம் சென்ற அந்த விமானம் அன்று சுடப்பட்டிருந்தால், இலங்கையின் அமைதி முயற்சியேதோல்வியடைந்திருக்கும். நார்வே வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவரும் பாலசிங்கத்துடன்இவ்விமானத்தில் சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+