சைதாப்பேட்டை, வாணியம்பாடியில் மதிமுக போட்டி
ஈரோடு:
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடியில் மதிமுக போட்டியிடும் என்றும் அச்சிறுப்பாக்கம் தொகுதியில் அதுபாமகவை ஆதரிக்கும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளரான வைகோ கூறினார்.
ஈரோட்டில் நடந்த மதிமுகவின் 10வது பொதுக்குழுக் கூட்டத்தின்போது இது தொடர்பாக வைகோ கூறியதாவது:
வரும் இடைத் தேர்தலின்போது அச்சிறுப்பாக்கம் தொகுதியில் தங்களுடைய கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதன்படி அத்தொகுதியில் நாங்கள் பாமகவுக்கு ஆதரவளிப்போம்.
ஆனால் மற்ற இரு தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
இருந்தபோதிலும் இந்த இரு தொகுதிகளிலும் பாஜக போட்டியிட விரும்பினால் எங்கள் முடிவை மறு பரிசீலனைசெய்வோம் என்றார் வைகோ.
இதேபோலவே சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றுகூறியுள்ள திமுக, அச்சிறுப்பாக்கத்தில் பாமகவுக்கு ஆதரவளிக்கப் போவதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக, பாமக மற்றும் மதிமுக ஆகிய மூன்று கட்சிகளுமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளன என்பதும்குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications