பாஸ்வான் ராஜினாமா
டெல்லி:
குஜராத் வன்முறையைத் தடுக்கத் தவறிய அம் மாநில முதல்வர் நரேந்திர மோடியை நீக்க மத்திய அரசு மறுத்துவருவதைக் கண்டித்து மத்திய அமைச்சரவையிலிருந்து ராம் விலாஸ் பாஸ்வான் தனது பதவியை ராஜினாமாசெய்தார்.
குஜராத் பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பாஜகவைக் கண்டித்து மத்திய அரசின் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி எதிர்த்துக் குரல் கொடுக்க ஆரம்பித்த போதே, பாஸ்வானின் லோக் ஜனசக்தியும் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தது.
லோக்சபாவில் 4 எம்.பிக்களைக் கொண்டுள்ள லோக் ஜன சக்தியைச் சேர்ந்த பாஸ்வான், இன்று மாலைதன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
லோக் ஜன சக்தியைச் சேர்ந்த 4 எம்.பிக்களும் நாளை நடாளுமன்றத்தில் நடக்கும் குஜராத் கண்டனத் தீர்மானம்மீதான விவாதத்தைத் தொடர்ந்து நடக்கும் ஓட்டெடுப்பில் மத்திய அரசுக்கு எதிராக வாக்களிப்பர் என்று பாஸ்வான்அறிவித்துள்ளார்.
நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக இருந்த பாஸ்வானும் ராஜினாமா செய்த பிறகு தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications