சேலத்தில் கடும் வெயிலுக்கு 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வர இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், வெயிலுக்குஆங்காங்கே மக்கள் பலியாகிக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த முறை கடுமையான கோடை காலமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சிநிலையம் அறிவித்துள்ளது.
சென்னையில் கடுமையாக வெயில் அடித்து வருகிறது. அதேபோல சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறுநகரங்களிலும் வெயில் கொளுத்தி வருகிறது.
சேலம் பஸ் நிலையம் அருகே ஆட்டோ டிரைவர் ஒருவர் வெயில் தாங்காமல் சுருண்டு விழுந்து இறந்தார். 60 வயதுமதிக்கத்தக்க நபர் ஒருவரும் வெயிலைத் தாங்க முடியாமல் இறந்தார். இருவரும் ஒரே நாளில் இறந்துள்ளனர்.
வெயில் கடுமையாக இருப்பதால் வயதானவர்களும், குழந்தைகளும், பெண்களும் வெளியில் வருவதைமுடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications