நாளை நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

வன்முறையைத் தூண்டி வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல்வேடிக்கை பார்த்து வரும் மத்திய அரசையும் கண்டித்து நாளை எதிர்க் கட்சிகள் தீர்மானம் கொண்டு வரவுள்ளன.

184வது பிரிவின் கீழ் நடக்கும் இந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு இறுதியில் ஓட்டெடுப்பும்நடக்கும்.

ஓட்டெடுப்பில் இந்தத் தீர்மானம் வென்றால் அது மத்திய அரசுக்கு பெரும் கேவலமாக அமையும். தீர்மானம்தோற்றால் குஜராத் விவகாரத்தில் மத்திய அரசுக்கு பெரும் வெற்றி கிடைத்ததாக அமையும்.

குஜராத்தில் வன்முறையைக் கண்டிக்கும் அதே நேரத்தில் இத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்போம் என்று திமுகஅறிவித்துள்ளது. திமுகவுடன் போட்டி போட்டுக் கொண்டு மதிமுக, பா.ம.கவும் மத்திய அரசை ஆதரித்தும்தீர்மானத்தை எதிர்த்தும் வாக்களிப்பதாக அறிவித்துள்ளன.

மதசார்பின்மையை தீவிரமாக ஆதரித்து வரும் திமுக குஜராத்தில் வன்முறையைக் கணடிக்கிறது. குஜராத்முதல்வரை மாற்றலாம் என்று கூட திமுக தலைவர் கருணாநிதி கூறினார். ஆனால், ஓட்டெடுப்பில் அரசைஆதரிக்கப் போவதாக அறிவித்துவிட்டார்.

அரசை ஆதரித்து வாக்களிக்கும் என்று கருதப்பட்ட அதிமுக நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்துவிட்டது.மோடி விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதலில் கண்டித்துவிட்டு பின்னர் அமுங்கிப்போனார். காரணம் அவருக்கும் பா.ஜ.கவுக்குமே வெளிச்சம்.

இந் நிலையில் மோடியை நீக்கியே ஆக வேண்டும் என்று போர்க் கொடி தூக்கியுள்ள தெலுங்கு தேசம் கட்சிவாஜ்பாய்க்கு கடைசி வரை சஸ்பென்ஸ் வைத்துள்ளது. தீர்மானத்தை ஆதரிப்போமா இல்லையா என்பதை கடைசிநிமிடத்தில் முடிவு செய்வோம். தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் வாஜ்பாய் என்ன பதில் சொல்கிறார்என்பதைப் பார்த்துவிட்டு முடிவு செய்வோம் என்று கூறியிருக்கிறார் நாயுடு.

தெலுங்கு தேசம் தரும் இந்த சஸ்பென்ஸ் பா.ஜ.க. தலைவர்களை வெறுப்பின் உச்சகட்டத்துக்கே கொண்டுசென்றுவிட்டது.

இந் நிலையில் திடீர் அறிவிப்புகளுக்கு புகழ் பெற்ற திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தீர்மானத்தைஎதிர்த்தும் அரசை ஆதரித்தும் வாக்களிப்போம் என்று கூறியுள்ளார். ஆனால், நாயுடு மற்றும் அதிருப்தி கூட்டணித்தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் அவர் கடைசி நேரத்தில் எந்த முடிவும் எடுக்கலாம் என்றுபா.ஜ.க. நம்புகிறது. அவரை முழுமையாக நம்ப வாஜ்பாய் தயாராக இல்லை.

கூட்டணியில் உள்ள பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்கும் என்றுதெரிகிறது. அதே போல சரத் யாதவின் ஐக்கிய ஜனதா தளமும் நடுநிலை வகிக்கலாம்.

இப்படி கூட்டணியில் உள்ள கட்சிகளே பா.ஜ.கவுக்கு பெரும் தலைவலியைத் தரவுள்ளதால் போதுமானஎம்.பிக்களைத் திரட்ட பகீரத பிரயத்தனத்தில் அக் கட்சி ஈடுபட்டுள்ளது. குட்டிக் கட்சிகள், சுயேச்சைகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆட்சியைத் தந்துவிட்டதால் அக் கட்சி அரசை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டது.

இந் நிலையில் தமிழக கூட்டணிக் கட்சிகள் தான் மத்திய அரசை கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்துள்ளன.

பிரதமரின் இல்லத்தில் கூட்டணிக் கட்சிகளின் அவசரக் கூட்டம் நடக்கிறது.

அதே நேரத்தில் இக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக தனியே தங்களுக்குள் சந்தித்துப் பேச திரிணமூல்காங்கிரஸ், தெலுங்கு தேசம், தேசிய மாநாடு ஆகிய கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

ராஜ்யசபாவில் வரும் 2ம் தேதி இதே போல ஓட்டெடுப்புடன் கூடிய தீர்மானம் விவாதத்துக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+