"நீங்க சண்டை போடுறீங்க... நாங்க வெளியே போறோம்"
சென்னை:
காவிரி பிரச்சனை தொடர்பாக திமுகவும் அதிமுகவும் சட்டசபையில் சண்டை போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டுபொறுக்க முடியாத இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று அவையை விட்டு வெளிநடப்புசெய்தன.
காவிரிப் பிரச்சனை இன்று சட்டசபையில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. காவிரிப் பிரச்சனை இன்னும் தீராமல்இருப்பதற்கு முந்தைய திமுக அரசுதான் காரணம் என்று அதிமுகவினர் குற்றம் சாட்டினர்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த திமுகவினர், முந்தைய அதிமுக அரசுதான் இதற்குக் காரணம் என்றுபதிலுக்குக் குற்றம் சாட்டினர். இதன் விளைவாக அவைக் காவலர்களால் இன்று திமுக எம்.எல்.ஏக்கள் இன்றுவெளியேற்றப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சனையான இந்த விவகாரத்திற்கு முடிவைத் தேடாமல்,அதிமுகவும் திமுகவும் அதை அரசியலாக்க முயல்வது துரதிருஷ்டவசமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் பழனிச்சாமி கூறினார்.
இதையடுத்து திமுகவும் அதிமுகவும் சண்டையிட்டுக் கொள்வதை எதிர்த்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி இந்தியகம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறினர்.
இவர்களைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்களும் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications