பெங்களூரில் 100 ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்த 2 தமிழர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூரில் 100 ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சடித்த தமிழகத்தைச் சேர்ந்த 2 பேரை பெங்களூர் போலீசார்கைது செய்தனர்.
பெங்களூர்-காந்தி நகரில் உள்ள ஒரு ஓட்டலில் கள்ள ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படுவதாகப் போலீசாருக்குத்தகவல் கிடைத்தது.
இதையடுத்து குறிப்பிட்ட அந்த ஓட்டலில் புகுந்து, போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த ஓட்டலின் ஒரு அறையில் இரண்டு பேர் சந்தேகத்துக்கு இடமான வகையில் தங்கியிருந்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையின்போது, அவர்கள் இருவருமே அந்த ஓட்டல் அறையில்தங்கியிருந்து 100 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து வந்ததை ஒப்புக் கொண்டனர்.
தமிழகத்தின் திருநெல்வேலியைச் சேர்ந்த பட்டதாரி கம்ப்யூட்டர் நிபுணரான ஷியாம் கனகராஜ் (43) மற்றும்திண்டுக்கல்லைச் சேர்ந்த சந்திரமோகன் (50) ஆகிய இந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications