தீர்மானம் தாக்கல்: தொடங்கியது விவாதம்
டெல்லி:
குஜராத் விவகாரம் குறித்து எதிர்க் கட்சிகள் கொண்டு வரும் தீர்மானம் லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட,சமாஜ்வாடி கட்சித் தலைவரான முலாயம் சிங் யாதவ் விவாதத்தைத் தொடங்கி வைத்தார்.
கேள்வி நேரம் முடிந்த பிறகு தொடங்கிய இந்த ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு எட்டு மணி நேரம் மட்டுமேஅனுமதிக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூறியுள்ளது.
லோக்சபாவின் 184வது பிரிவின் கீழ் தற்போது சூடாக நடந்து வரும் இந்த விவாதத்தின் நிறைவில் பிரதமர்வாஜ்பாய் விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசுவார். அதைத் தொடர்ந்து ஓட்டெடுப்பு நடைபெறும்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தொடர்ந்து ஆறு நாட்களாக லோக்சபாவை ஸ்தம்பிக்க வைத்த குஜராத்விவகாரம் தொடர்பாக எதிர்க் கட்சிகளின் தீர்மானத்தை எடுத்துக் கொண்டு விவாதம் நடத்தலாம் என்று கடந்தவாரம் துணை சபாநாயகர் சயீது அனுமதி அளித்தார்.
இதையடுத்து தற்போது லோக்சபாவில் சூடான விவாதம் நடந்து வருகிறது.
குஜராத் கலவரத்தின்போது பெண்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாக திரிணாமூல் காங்கிரஸ்எம்.பியான கிருஷ்ணா போஸ் தெரிவித்தார். தங்களுக்கு எதிரான கொடுமைகளை நேரடியாகப் போலீசிடம்தெரிவிப்பதற்குக் கூட முடியாத நிலையில் பெண்கள் தங்கள் குழந்தைகள் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பியஅவல நிலையையும் அவர் எடுத்துக் கூறினார்.
"மோடியை மூடி மறைக்கும் பாஜக"
குஜராத்தில் இவ்வளவு வன்முறைகள் நடந்தபோதும், அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை நீக்காமல் மத்தியஅரசு தொடர்ந்து அவரைக் காப்பாற்றும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின.
"மனித இனத்தையே கொன்று குவித்த கொலையாளி" என்று மோடியை வர்ணனை செய்த எதிர்க் கட்சிகள், இதைக்கண்டு கொள்ளாத சந்தர்ப்பவாத தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளையும் சாடின.
"ரோமாபுரி பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, அதன் மன்னன் நீரோ பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்" என்பதுபோலத்தான் குஜராத் மாநிலமே வன்முறையால் அழிந்து கொண்டிருக்கும்போது அதை வாஜ்பாய் கண்டுகொள்ளாமலேயே இருக்கிறார் என்று விவாதத்தை இன்று துவக்கி வைத்த முலாயம் சிங் யாதவ் தன் பங்குக்குக்குற்றம் சாட்டினார்.
மோடியை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமித்து குஜராத்வன்முறைகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தன்னுடையவிவாதத்தின்போது பேசினார்.
அரசியல் சாசனத்தின் 355வது பிரிவைப் பயன்படுத்தி குஜராத் சட்டசபையை இயங்க விடாமல் தடுக்க வேண்டும்என்றும் சோனியா கூறினார். இந்தப் பிரிவைப் பயன்படுத்தும்போது, அரசு இருக்கும், மோடியும் இருப்பார்.ஆனால் மாநில ஆளுநரின் பிடியில்தான் அரசு இருக்கும். சட்டசபை முழுவதுமாகச் செயலிழந்து விடும்.
குஜராத் பிரச்சனை குறித்து இரட்டை நிலையைக் கடைப்பிடிப்பதாகவும் வாஜ்பாயைக் குற்றம் சாட்டிப் பேசினார்சோனியா. ஒரு நாட்டின் பிரதமரே இப்படி இரு விதமாகப் பேசினால், அவரிடமிருந்து நாம் எதைத்தான்எதிர்பார்க்க முடியும் என்றும் சோனியா அவரைச் சாடினார்.












Click it and Unblock the Notifications