அருப்புக்கோட்டை அருகே சேற்றில் சிக்கி 4 குழந்தைகள் பலி
Subscribe to Oneindia Tamil
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை அருகே சேற்றில் சிக்கி 4 குழந்தைகள் பலியாகின.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த பந்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகள்பொண்ணு (3), முனியாண்டியின் மகள்கள் மகேஸ்வரி (6), சுமதி (5) மற்றும் முத்தனின் மகன் முத்துராமலிங்கம்(7).
இவர்கள் அனைவரும் அங்குள்ள பஞ்சாயத்து ஆரம்பப் பள்ளியில் படித்து வந்தனர்.
நேற்று மாலை அவர்கள் வீட்டுக்குத் திரும்பும்போது, வழியில் சேறு நிறைந்த ஒரு சிறிய குளத்தில் சிக்கிக் கொண்டுஇந்த 4 குழந்தைகளுமே இறந்து போயினர்.
அந்தக் குழந்தைகள் பள்ளிக்குக் கொண்டு சென்ற புத்தகப் பைகள் அந்தக் குளத்தின் அருகே அனாதையாகக்கிடந்தன. இதன் பிறகுதான் அந்தக் குழந்தைகள் குளத்தில் மூழ்கிப் போன தகவல் தெரிய வந்தது.
அந்த மாணவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீசார், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications