கள்ளக் காதல்: தாய், நண்பனை வெட்டிக் கொன்ற வாலிபர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே அம்பத்தூரில் நண்பனையும், அவனுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்ட தன் தாயையும்வெட்டிக் கொன்று விட்டு போலீஸில் சரணடைந்தார் வாலிபர்.

அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும்,செந்தில்குமார் என்ற மகனும் மற்றொரு மகளும் உள்ளனர்.

கோபாலுக்கும், ஜெயலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சமீபத்தில் இருவரும் பிரிந்தனர். தனியாகப் பிரிந்துசென்ற பின்னர் தாம்பரத்திற்கு சென்று அங்கு லாட்டரிக் கடை வைத்து நடத்தி வருகிறார் கோபால்.

செந்தில்குமார் ஒரு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். ஜெயலட்சுமி ஒரு கார்மெண்ட் நிறுவனத்தில்வேலை பார்த்து வந்தார். பெயிண்ட் அடிக்கச் செல்லும்போது சுந்தர் என்ற வாலிபர், செந்தில்குமாருக்குப்பழக்கமாகவே, இருவரும் இணைபிரியாத நண்பர்களாயினர்.

இந்நிலையில் சுந்தரின் வீட்டில் ஏதோ பிரச்சினை ஏற்படவே அவர் வீட்டை விட்டு வெளியேறினார். தனதுநண்பனை அணுகிய சுந்தர், செந்தில்குமாரின் வீட்டில் தங்கிக் கொள்வதாகவும்,சாப்பாடுக்குரிய பணத்தைக்கொடுத்து விடுவதாகவும் கூறினார்.

இதுகுறித்து ஜெயலட்சுமியிடம் செந்தில்குமார் கூறவே, அவரும் சரி என்று கூறிவிட்டார். இதையடுத்துசெந்தில்குமாரின் வீட்டில் குடியேறினார் சுந்தர்.

வீட்டிற்கு வந்த சில நாட்களிலேயே சுந்தருக்கும், ஜெயலட்சுமிக்கும் இடையே தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது.செந்தில்குமார் வீட்டில் இல்லாதபோது, இருவரும் "ஜாலி"யாக இருந்து வந்தனர்.

சமீபத்தில் செந்தில்குமாருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. இதுதொடர்பாக ஒரு டாக்டரிடம் அவரைஅழைத்துச் சென்றார் சுந்தர். பின்னர் அவருக்கு சுந்தர் மருந்துகளும் வாங்கிக் கொடுத்தார்.

இரவில் அந்த மருந்துகளை செந்தில்குமார் சாப்பிட்டபோது, வழக்கத்திற்கு மாறாக ஆழ்ந்த தூக்கம் வந்தது.இதனால் சந்தேகப்பட்ட அவர் மறுநாள் (நேற்று) இரவு மாத்திரை சாப்பிடுவது போலப் பாசாங்கு செய்து விட்டுசாப்பிடாமல் படுத்துக் கொண்டார்.

அதிகாலை 3 மணியளவில் விழித்துப் பார்த்தபோது, ஒரு மகன் காணக் கூடாத காட்சியைக் கண்டார் செந்தில்குமார்.நண்பனாக வீட்டுக்கு அழைத்து வந்த சுந்தரும், பெற்றெடுத்த தாயும் தவறான கோலத்தில் இருந்ததைப் பார்த்ததும்அவர் ஆத்திரத்தின் உச்சத்திற்கே போனார்.

வீட்டை விட்டு வெளியே வந்த அவர் அங்கிருந்த அரிவாளை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டித்தள்ளினார். இதில் இருவரும் அங்கேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள்.

ஆத்திரம் அடங்கிய செந்தில்குமார், ரத்தம் சொட்டிய அரிவாளுடன் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து அம்பத்தூர்போலீஸ் நிலையத்திற்குச் சென்று, நடந்த சம்பவத்தைக் கூறி சரணடைந்தார்.

இதையடுத்து போலீஸ் படை மேனாம்பேடுக்கு விரைந்து சென்று இரு உடல்களையும் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பியது. இந்தச் சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+