ஓட்டெடுப்பில் வெல்வோம்: தே.ஜ.கூ. நம்பிக்கை
டெல்லி:
குஜராத் பிரச்சனை தொடர்பாக எதிர்க் கட்சிகள் கொண்டு வந்துள்ள தீர்மானம் மீதான ஓட்டெடுப்பில் தேசியஜனநாயகக் கூட்டணி அரசு வெற்றி பெறும் என்று அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் பாதுகாப்புத்துறைஅமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
வாஜ்பாய் தலைமையில் நேற்று நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்குப் பின் அவர்நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தத் தீர்மானம் மீது நடக்கும் விவாதத்தைத் தொடர்ந்து நடக்கும் ஓட்டெடுப்பில் எங்கள் கூட்டணி வெற்றி பெறப்போவது உறுதி.
தீர்மானத்திற்கு எதிராக ஓட்டளிக்கும்படி கூட்டணிக் கட்சிகளின் கொறடாக்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.அவர்களும் அவ்வாறே செய்வதாகக் கூறியுள்ளனர்.
தெலுங்கு தேசம் கட்சி தன்னுடைய நிலை குறித்து தெளிவாக எதையும் கூறாவிட்டாலும், மத்திய அரசுக்கு எதிரானஎந்தச் செயலிலும் அக்கட்சி ஒருபோதும் ஈடுபடாது.
ராம் விலாஸ் பாஸ்வானின் ராஜினாமாவால் மத்திய அரசுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை. எங்கள் கூட்டணிவலுவாகவும் ஒற்றுமையுடனும் உள்ளது என்றார் பெர்னாண்டஸ்.


Click it and Unblock the Notifications
