எம்.பிக்கள் எண்ணிக்கை
டெல்லி:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை எதிர்த்து இன்று கண்டனத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படுகிறது.
இதன் மீது விவாதம் நடந்து முடிந்தபின் ஓட்டெடுப்பும் நடக்கும்.
இந்த ஓட்டெடுப்பில் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளது.
லோக் சபாவில் இப்போது 540 எம்.பிக்கள் உள்ளனர். இதில் தெலுங்கு தேசம், தேசிய மாநாடு, அதிமுக ஆகியகட்சிகளிடம் 44 எம்.பிக்கள் உள்ளனர்.
இதில் தேசிய மாநாடும் அதிமுகவும் நடுநிலை வகிக்கவுள்ளன. இதனால் ஓட்டுபோடும் எம்.பிக்களின் எண்ணிக்கை524 தான். தெலுங்கு தேசமும் நடுநிலை வகுக்கும் என அரசு நினைக்கிறது. இதனால் ஓட்டளிக்கும் எம்.பிக்கள்எண்ணிக்கை 496 ஆகக் குறையலாம்.
அரசுக்கு 249 ஓட்டுக்கள் கிடைத்தாலே தீர்மானத்தை தோற்கடித்துவிடலாம். இப்போது அரசுக்கு 275 எம்.பிக்களின்ஆதரவு உள்ளது. பகுஜன் சமாஜையும் வளைத்துவிட்டதால் இப்போது கூடுதலாக 13 எம்.பிக்கள் ஆதரவு உள்ளது.ஆக, 288 எம்.பிக்கள் ஆளும் கூட்டணியில் உள்ளனர்.
தெலுங்கு தேசத்தின் 28 எம்.பிக்கள் எதிர்த்து வாக்களித்தாலும் கூட தேவைப்படும் ஓட்டுக்கள் 249 தான் என்பதால்எளிதில் வென்றுவிடலாம் என்று மத்திய அரசு நம்புகிறது.












Click it and Unblock the Notifications