மோடியை நீக்க வேண்டும்: சோனியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நீக்க வேண்டும் என சோனியா காந்தி லோக் சபாவில் வலியுறுத்தினார்.

குஜராத் அரசைக் கண்டிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்துவக்கி வைத்தார். அவர் நரேந்திர மோடியைக் மிகக் கடுமையாக சாடினார்.

பின்னர் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அரசியல் சட்டத்தின்படி ஒரு மாநில முதல்வருக்கு உரியகடமையைச் செய்ய மோடி தவறிவிட்டார். அவரை முதலில் பதவியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு உடனேகுஜராத்தில் அமைதியை ஏற்படுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் வேடிக்கை பார்ப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்.

கலவரத்தையும் வன்முறையையும் நடத்தி வருவது யார் என்பது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டுவிசாரிக்க வேண்டும்.

இந்த வன்முறை தொடர்பாக தேசிய மனித உரிமைக் கமிஷன் தந்துள்ள அனைத்து பரிந்துரகளையும் மத்திய அரசுஏற்க வேண்டும். தவறு செய்தவர்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும்.

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிவாரண உதவிகளைத் தர வேண்டும்.

கலவரத்தைத் பா.ஜ.க. தான் மறைமுகமாகத் தூண்டி வருகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதை முதலில்உங்கள் கட்சி நிறுத்த வேண்டும்.

அரசியல் சட்டத்தின் 355 பிரிவின் கீழ் அம் மாநில அரசின் சட்டமன்ற செயல்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும்.இந்த விவகாரத்தில் வாஜ்பாய் இரட்டை நிலையை மேற்கொண்டுள்ளார். பிரதமரே முன்னுக்குப் பின் முரணாகப்பேசினால் நாடு இந்த அரசிடம் இருந்து எந்த நல்ல விஷயத்தை எதிர்பார்க்க முடியும்?

குஜராத் வன்முறையை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் அமைதியாகப் பார்த்துக் கொண்டுள்ளன. நரேந்திரமோடி தனது மதவாத செயல்களால் குஜராத்தின் பெயரையே கெடுத்து சீரழித்துவிட்டார்.

வன்முறையைத் தடுத்த போலீஸ் அதிகாரிகளை பந்தாடுகிறார்கள். கலவரத்தைத் தடுத்த அதிகாரிகளை இடமாற்றம்செய்கிறார்கள். அந்த மாநில அரசே வன்முறையைத் தூண்டிவிட்டு நடத்திக் கொண்டிருக்கிறது.

இதனால் நீங்கள் ஓட்டுக்களை அள்ளிவிட முடியாது. இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள்மதசார்பில்லாதவர்கள். உங்கள் செயல்களை அந்த மக்கள் எந்தக் காலத்திலும் எந்தக் காரணதுக்காகவும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

குஜராத்தில் நீங்கள் செய்து வரும் கொடுமையை இந்த நாடு நிச்சயம் மறக்காது. கோத்ரா ரயில் எரிப்பை நாங்கள்கண்டிக்கவில்லை என்று வீம்புக்காக பேசி வருகிறீர்கள். அந்தச் சம்பவத்தை முதலில் கண்டித்ததே நான் தான்.

குஜராத் அரசு அந்த மாநில மக்களின் முதுகில் குத்தியது என்றால் மத்திய அரசு இந்த நாட்டு மக்களைஏமாற்றிவிட்டது.

டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைவர்களின் உதவியுடன் நரேந்திர மோடி குஜராத்தை ரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்டுள்ளார்.

இவ்வாறு சோனியா மிக உணர்ச்சியமயமாகப் பேசினார்.

அவர் பேசும்போது பா.ஜ.கவினர் எதிர் குரல் கொடுத்தனர். இதை எதிர்த்து எதிர்க் கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்புகோஷம் எழுப்பினர்.

சோனியாவைத் தொடர்ந்து பிற கட்சித் தலைவர்களும் பேசி வருகின்றனர். பிரதமர் வாஜ்பாய் பதிலளித்த பின்னர்இரவு 8 மணியளவில் இந்தத் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடக்கும்.

லோக் ஜன்சக்தி, தெலுங்கு தேசம், தேசிய மாநாடு கட்சிகளைத் தொடர்ந்து இப்போது இந்திய தேசிய லோக் தள்கட்சியின் தலைவர் சவுதாலாவும் மத்திய அரசைக் கண்டித்துப் பேசியுள்ளார். எனவே அவரது கட்சி இந்தத்வாக்கெடுப்பில் எப்படி நடந்து கொள்ளும் என்பதும் சந்தேகத்திற்கிடமானதாக உள்ளது.

முன்னதாக தீர்மானத்தின் விவாதத்தில் பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. எர்ரன் நாயுடு,

குஜராத் அரசின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள், மோடியை நீக்கியே ஆக வேண்டும், அதைஉடனே செய்ய வேண்டும். அம் மாநிலத்தில் இப்போதைக்கு தேர்தலை நடத்தக் கூடாது. இந்த விவாதத்துக்குபிரதமர் வாஜ்பாய் என்ன பதில் தருகிறார் என்பதைப் பொறுத்துத் தான் நாங்கள் வாக்களிப்போம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+