உணர்ச்சி வசப்பட்டு பதிலளித்த வாஜ்பாய்
டெல்லி:
குஜராத் விவகாரம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குபதிலளித்தபோது, பிரதமர் வாஜ்பாய் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.
குஜராத் பிரச்சனை குறித்துப் பேசியதை விட, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியையும் வாஜ்பாயையும்தான்எதிர்க் கட்சி எம்.பிக்கள் விவாதத்தின்போது அதிகமாக வசை பாடினர்.
இந்த விவகாரம் தொடர்பாக தான் குஜராத்தில் ஒன்றும் கோவாவில் ஒன்றும் பேசியதாக காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி கூறியதை வாஜ்பாய் வன்மையாக மறுத்தார். குஜராத்தில் நான் என்ன பேசினேனோஅதையேதான் கோவாவில் நடந்த பாஜக கூட்டத்திலும் பேசினேன் என்றார் வாஜ்பாய்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு குஜராத் பிரச்சனையை மத்திய அரசு கையாள வேண்டும் என்று சோனியாகுறிப்பிட்டிருந்தார்.
அவருடைய இந்தக் கருத்தை மதிக்கிறேன். ஆனால் எங்களுடைய பாஜக மட்டுமல்ல, நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளுமே அரசியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டும் என்றுவாஜ்பாய் பதிலளித்தார்.
தன்னுடைய பதிலுரையின்போது, மீடியாவையும் வாஜ்பாய் கடுமையாகச் சாடினார். குஜராத் வன்முறைக்காட்சிகளையும் எரிந்துபோன உடல்களையும் தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பியதைக் கண்டித்தஅவர், இவ்வாறு ஒளிபரப்புவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறினார்.
வன்முறையின்போது குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்ட செய்திகளை பத்திரிக்கைகள் அழுத்தம்திருத்தமாகச் சொல்வதால்தான் மதக் கலவரம் மேலும் அதிகமாக வெடிக்கிறது என்றார் வாஜ்பாய்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட குஜராத்துக்கு ரூ.150 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் தன்னுடையபதிலுரையின்போது வாஜ்பாய் அறிவித்தார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications