அன்பழகன் சட்டசபைக்குச் செல்ல கருணாநிதி தடை?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேவைப்படும்போது சட்டசபைக்கு வருவேன் என்று தமிழக சட்டசபை எதிர்க் கட்சித் தலைவரும் திமுக பொதுச்செயலாளருமான அன்பழகன் கூறினார்.

நேற்று சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி நிருபர்களுக்குப் பேட்டியளித்துக்கொண்டிருந்தபோது, அன்பழகன் சமீப காலமாக சட்டசபைக்கே வருவதில்லையே என்று ஒரு நிருபர் கேட்டார்.

அப்போது அங்கிருந்த அன்பழகனே குறுக்கிட்டு, தேவைப்படும்போது நான் கட்டாயம் சட்டசபைக்கு வருவேன்என்றார்.

தற்போது சட்டசபையில் எதிர்க் கட்சித் துணைத் தலைவரான துரைமுருகன் காவிரிப் பிரச்சனை குறித்து விவாதித்துக்கொண்டிருக்கும்போது, இடையிலே நான் வந்தால் அது இடைஞ்சலை ஏற்படுத்தி விடும் என்றும் அன்பழகன்விளக்கமளித்தார்.

எதிர்க் கட்சித் தலைவர் அறைக்கு வருகிறார், அவைக்கு வருவதில்லை. தேவைப்படும்போது வருவார் என்றுஉடனிருந்த கருணாநிதியும் கூறினார்.

ஆனால் எந்த விவகாரமாக இருந்தாலும் துரைமுருகன் துணிச்சலோடு எழுந்து அரசுக்கு எதிரான கருத்துக்களைதெரிவித்து வருகிறார். உடனே அவருக்குப் பக்க பலமாக முன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம் வழுதி,முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோரும் அதிமுகவைத் தாக்கிப் பேசுவார்கள்.

ஆனால் சட்டசபையில் பல முக்கியமான விவாதங்களின்போது, அன்பழகன் மிகவும் அமைதியாக இருந்துவிடுவதால்தான் அன்பழகன் சட்டசபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கருணாநிதிஆணையிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+