ராஜ்யசபாவில் எதிர்க் கட்சிகளிடம் பணிந்தது பா.ஜ.க.
டெல்லி:
குஜராத் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடக் கோரி எதிர்க் கட்சிகள் கொண்டு வந்துள்ள தீர்மானத்தில்வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்தை அரசு ஏற்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறினார்.
இதன்மூலம் இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு ஒப்புக் கொண்டதாக ஆகிவிட்டது. இதன் மூலம் தீர்மானத்தின் மீதுஓட்டெடுப்பு நடத்தப்பட்டு தோல்வியைத் தழுவுவதைத் தவிர்க்க அரசு முடிவு செய்துள்ளது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கண்டித்து லோக் சபாவில் விதி எண் 184ன் கீழ் விவாதம் நடத்தப்பட்டுஓட்டெடுப்பு நடந்தது. இதில் மத்திய அரசு வெற்றி பெற்றது.
அதே போன்ற தீர்மானம் இன்று ராஜ்யசபாவில் கொண்டு வரப்பட்டது. இங்கு எதிர்க் கட்சி எம்.பிக்கள் அதிகஎண்ணிக்கையில் இருப்பதால் தீர்மானத்தில் அரசு தோற்பது நிச்சயமாகிவிட்டது.
இதையடுத்து ஓட்டெடுப்பு நடத்தாமல் ஒருமித்த கருத்தை உருவாக்க பா.ஜ.க. அரசு முயன்று வருகிறது.
இன்று இந்தத் தீர்மானம் மீதான விவாதத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அர்ஜூன்சிங் துவக்கிவைத்தார். அவர் பேசுகையில், குஜராத் அரசு தேசத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வேலையில் இறங்கியுள்ளது.
சிறுபான்மையினரை ஒழித்துக் கட்ட மாநில அரசே வன்முறையை நடத்தி வருகிறது. இதை மத்திய அரசு வேடிக்கைபார்த்து வருகிறது. இதனால் நாடே நம்பிக்கை இழந்து போய் நிற்கிறது. உடனே இந்த மாநிலத்தில் அரசியல்சட்டத்தின் 355வது பிரிவைப் பயன்படுத்தி சட்டம்-ஒழுங்கை மத்திய அரசு நிலைநாட்ட வேண்டும் என்றார் சிங்.
அப்போது பேசிய ராஜ்யசபா பா.ஜ.க. தலைவரும் வெளியுவுத்துறை அமைச்சருமான ஜஸ்வந்த் சிங்,
எதிர்க் கட்சியினரின் கவலையையும் இது தொடர்பான தீர்மானத்தையும் நாங்கள் அப்படியே ஏற்கிறோம். அரசியல்சட்டத்தின் 355 வது பிரிவின் கீழ் குஜராத் அரசு மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்திருக்கிறோம்.
மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தரும் வகையில் உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கைகளைஎடுத்து வருகிறது. மேலும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளோம்.
ஆகவே, ராஜ்யசபாவில் ஒருமித்த கருத்துடன் நாம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
இதன்மூலம் ராஜ்யசபாவில் தோல்வியைத் தழுவுவதை தவிர்க்கலாம் என அரசு கருதுகிறது. ஆனால். இதை எதிர்க்கட்சிகள் ஏற்குமா அல்லது ஓட்டெடுப்பை வலியுறுத்துமா என்பது இரவில் தான் தெரியும்.
விவாதம் நடத்தப்பட்டு இரவில் ஓட்டெடுப்பு நடந்தால் மத்திய அரசு தோற்கும் என்பது மட்டும் நிச்சயம்.
மோடியின் அமைதிப் பேரணி!!!!:
இந் நிலையில் நரேந்திர மோடி தலைமையில் குஜராத்தில் வதோதரா நகரில் இன்று அமைதிப் பேரணி நடந்தது.இதில் மத்திய அமைச்சர்கள் முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி, மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
குஜராத்தில் வன்முறைத் தாண்டவம்:
இந் நிலையில் குஜராத்தில் வன்முறை தொடர்ந்து நடந்து வருகிறது. அகமதாபாத்தில் இன்று காலை முஸ்லீம்களின்குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 80 வீடுகள் எரிந்து சாம்பலாயின.
பின்னர் இந்தக் கும்பல் கல்வீச்சில் ஈடுபட்டது. வன்முறையாளர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர்புகைகுண்டுகளை வீசினர்.
நேற்றும் வன்முறைக் கும்பல்கள் கத்திக் குத்து செயல்களில் ஈடுபட்டன. கைகளில் வாள்களுடன் அவர்கள்சுதந்திரமாய் சுற்றி வந்தனர்.
ஒமர் ராஜினாமாவை ஏற்கவில்லை: வாஜ்பாய்
குஜராத் விவகாரத்தில் மத்திய அரசுடன் மோதி வரும் தெலுங்கு தேசம் கட்சி இன்னும் தொடர்ந்து தேசிய ஜனநாயகமுன்னணியில் இருந்து வருவதாக பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தனது ராஜினாமவைத் தந்த ஒமர் அப்துல்லாவின் கடிதத்தையும் ஏற்கப் போவதில்லை என்றும்அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications