ரணிலுக்கு சந்திரிகா மீண்டும் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளை ஆளும் பொறுப்பை விடுதலைப்புலிகளிடமே விட்டுவிடும்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் போக்கை அந்நாட்டு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கண்டித்துள்ளார்.

தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் இப்பகுதிகளில் புலிகள் இடைக்கால அரசு அமைத்துக் கொள்வதற்கு ரணில்சம்மதித்துள்ளார்.

தாய்லாந்தில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த இடைக்கால அரசுமுழு வடிவம் பெற்று அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புலிகளுக்கு அதிகம் இடம் தரக் கூடாது என்றும் அவர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும்என்றும் சந்திரிகா ஏற்கனவே ரணிலுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் புலிகளின் இடைக்கால அரசுக்காக நாட்டைத் துண்டாடக் கூடாது என்று ரணிலுக்கு சந்திரிகா மீண்டும்எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் அமைதிப் பேச்சுவார்த்தை இதனால் மட்டுமல்ல, எந்தக் காரணத்தாலும் தடைபடக் கூடாது என்று ரணில்விரும்புகிறார்.

தான் மேற்கொண்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சி எந்த விதத்திலும் முறிந்து போகக் கூடாது என்பதிலும்ரணில் தீவிரமாக உள்ளார்.

அமைதிப் பேச்சுவார்த்தையை முறித்து விட்டு, மீண்டும் போருக்கா நாம் திரும்ப முடியும் என்று ரணில் பதிலுக்குக்காட்டமாகக் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+