கார் விபத்தில் அமைச்சர் படுகாயம்: மூக்கில் அறுவைச் சிகிச்சை
சென்னை:
மாமல்லபுரம் அருகே இன்று காலை ஏற்பட்ட கார் விபத்தில் அமைச்சர் ஜீவானந்தம் படுகாயமடைந்தார்.
நாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற மே தினப் பேரணியில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பிக்கொண்டிருந்தார் தமிழக வேளாண்துறை அமைச்சரான ஜீவானந்தம்.
அவருடன் குத்தாலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவான நடராஜனும் காரில் வந்து கொண்டிருந்தார். இவர்களுடன்மேலும் இருவரும் காரில் இருந்தனர்.
இன்று அதிகாலை மாமல்லபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அந்தக் கார் திடீரென்று ஒரு விளம்பரப்பலகையில் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் காரிலிருந்த நான்கு பேருமே பலத்த காயமடைந்தனர். அனைவரும் சென்னை-அப்போலோமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஜீவானந்தத்துக்கு மூக்கில் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைசெய்யப்பட்டது.
அவர்கள் யாருக்கும் ஆபத்து எதுவும் இல்லை என்று சிகிச்சையளித்த டாக்டர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications