பொள்ளாச்சியில் மதிமுக பிரமுகர் குண்டு வீசி கொலை
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே மதிமுக பிரமுகர் குண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இதில் அவருடைய தலை சிதறியது.
பொள்ளாச்சி அருகே உள்ள சுப்பேகவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் கருப்புசாமி (37). இவர் மதிமுகவின் மாவட்டபிரதிநிதியாவார்.
அதே பகுதியைச் சேர்ந்த மெய்யாசாமி (33) மற்றும் ஈஸ்வரன்(36) ஆகியோருடன் ஆழியாற்றங்கரையில் உள்ளவிநாயகர் கோவில் அருகே கல்லில் அமர்ந்து நேற்று அவர் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியில் உள்ள பழனிச்சாமி, துரையன், சக்திவேல், சக்தி, பிரபு, மாரிமுத்து ஆகியோர் வந்துகருப்புசாமியிடம் தகராறு செய்தனர்.
பின்னர் தகராறு வலுக்கவே கோபமடைந்த எதிர் தரப்பினர் கருப்புசாமியைத் அரிவாளால் வெட்டினர். கூடஇருந்தவர்களையும் தாக்கிய அந்தக் கும்பல், திடீரென்று கருப்புசாமியின் மீது வெடிகுண்டை வீசிவிட்டுத்தப்பியோடினர்.
இந்த வெடிகுண்டு வீச்சில் கருப்புசாமியின் தலை சிதறி, அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தாக்கப்பட்டமெய்யாசாமியும், ஈஸ்வரனும் அம்பராம்பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கருப்புசாமியைக் கொலை செய்தவர்கள், புதிய தமிழகம் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் ஈஸ்வரியின்ஆதரவாளர்கள் என்று கருப்புசாமியின் ஆதரவாளர்கள் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications