நகைக் கடைகளில் கொள்ளையடித்த 2 பேர் கைது
சென்னை:
சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் நகைக் கடைகளாகக் குறிவைத்துக் கொள்ளையடித்து வந்த 2பேரைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.22 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தையும்போலீசார் கைப்பற்றினர்.
சமீபகாலமாக சென்னை நகரில் கொள்ளைச் சம்பவங்கள் பெருகி, சென்னை மாநகரம் ஒரு "கொள்ளை"மாநகரமாகவே மாறிவிட்டது. தினந்தோறும் வீடுகளில் புகுந்து கொள்ளையர்கள் நகைகளையும் பணத்தையும்அள்ளிச் செல்வது சகஜமாகவே போய்விட்டது.
இதற்கிடையே சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் நகைக் கடைகளாகப் பார்த்துக் குறிவைத்து அவற்றை சிலகொள்ளைக் கும்பல் சூறையாடி வந்தது. பெரும்பாலும் இந்தக் கடைகளின் பின்பக்கம் உள்ள சுவர்களில் ஓட்டைபோட்டு உள்ளே புகுந்தே இந்தக் கும்பல்கள் கொள்ளையடித்து வந்தன.
இந்நிலையில் இந்த நகைக் கடைக் கொள்ளைகள் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படைப் போலீசார் நேற்றுமாலை இரண்டு பேரைக் கைது செய்தனர்.
அவர்கள் இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டபோது, சுமார் ரூ.40 லட்சம் மதிப்பிலானநகைகள் மற்றும் பணத்தை அவர்கள் கொள்ளையடித்திருப்பதாகத் தெரிய வந்தது.
இதிலிருந்து சுமார் ரூ.22 மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை மட்டும் தற்போது போலீசார் கைப்பற்றியுள்ளனர்.இதில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும், 38 கிலோ வெள்ளி நகைகளும், ரூ.13 லட்சம் ரொக்கமும்அடங்கும் என்று தமிழக டி.ஜி.பியான நெய்ல்வால் இன்று நிருபர்களிடம் கூறினார்.
கைது செய்யப்பட்ட இரண்டு பேர் தவிர மேலும் நான்கு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் தொடர் கொள்ளைகள் ஏன் நடக்கின்றன என்று கேட்டால் அதற்கு விடை கூறுவது கடினம் என்றுகூறிய நெய்ல்வால், தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்தும் நிறையப் பேர் கொள்ளையடிப்பதற்காகவேசென்னைக்கு வருவதாகவும் தெரிவித்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications