3வது அணி அமைய வாய்ப்பே இல்லை: வாசன்
நாகர்கோவில்:
தமிழகத்தில் 3வது அணி அமைவதற்கான வாய்ப்பே இல்லை என்று தமாகா தலைவரான ஜி.கே. வாசன் கூறினார்.
நாகர்கோவிலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் நேற்று அவர் கூறியதாவது:
காங்கிரசுடன் தமாகா இணைவது குறித்து எங்கள் கட்சித் தொண்டர்கள் தெளிவாக உள்ளனர். காங்கிரசுடனானஇணைப்பு குறித்து அக்கட்சியின் தலைவரான சோனியா காந்தியுடன் இரண்டு முறை பேசியுள்ளேன்.
காங்கிரசின் மூத்த தலைவர்கள் விரைவில் சென்னை வந்து பேச உள்ளனர். அதன் பிறகே இணைப்பு குறித்து முடிவுஎடுக்கப்படும்.
குமாரதாஸ் பிரச்சனையில் கட்சி தெளிவாகவே உள்ளது. கட்சி என்றால் சில கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான்செய்யும்.
இடைத்தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பேசி முடிவெடுப்போம். ஆனால் காங்கிரசுடன் இணைந்துவேட்பாளரை நிறுத்தும் எண்ணம் இல்லை.
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவில்லை. திமுகவும் அதிமுகவும்சட்டசபையில் நேரத்தை வீணாக்காமல் மக்கள் பிரச்சினை களைவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனது ராஜினாமா கடிதத்தை அவரது கட்சித் தலைவரிடம் கொடுத்துள்ளார்.அதற்கு பதிலாக அவர் கவர்னரிடம் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
லோக்சபாவில் பாஜக ஓட்டடுப்பில் வென்றதால் குஜராத் பிரச்சனையில் இந்தியா முழுவதும் பாஜகவுக்கு ஆதரவுகொடுத்துள்ளது என்று அர்த்தம் இல்லை. அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
குஜராத் பிரச்சனைக்கு மத்திய அரசு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். மக்களின் அமைதியான வாழ்க்கையைஅரசு உறுதி செய்ய வேண்டும் என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications