காவல் நிலையத்தில் 2 பெண்கள் கற்பழிப்பு: காக்கிச் சட்டைகள் வெறிச் செயல்
வாணியம்பாடி:
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் போலீசாரே துச்சாதனர்களாக மாறி பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்களைதுகிலுறிந்து காவல் நிலையத்தில் வைத்தே கற்பழித்துள்ளனர். இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி-வேலூர் மாவட்டங்களுக்கு இடையே உள்ள ஊத்தங்கரை தாலுகாவில் ஏலச்சூர் கிராமத்தில் குறவர்இனத்தைச் சேர்ந்த பழங்குடியினர் ஏராளமாக வசித்து வருகின்றனர்.
வாணியம்பாடியில் இருந்து போலீசார் அடிக்கடி இந்தப் பகுதிக்கு வந்து பெண்களிடம் தவறாக நடந்து கொண்டுவந்துள்ளனர். இந்தப் பழங்குடியினருக்கு ஆதரவாக குரல் கொடுக்க யாரும் இல்லாததால் இவர்களை அடிக்கடிபோலீசார் துன்புறுத்தி வந்தனர்.
இந் நிலையில் சமீபத்தில் பார்க்க நன்றாக இருக்கும் சில பெண்களை விசாரணைக்கு அழைத்துச் செல்கிறோம் என்றுகூறி வாணியம்பாடி காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு வைத்து இந்தப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மங்கம்மாள் என்ற பெண் கூறுகையில், என் சேலையை போலீஸ்காரர்கள் உருவினர். ஒருவர்முகத்தில் கடித்தான். என்னை பல விதத்தில் பாலியல்ரீதியில் அவர்கள் துன்புறுத்தினர் என்றார்.
மணிமேகலை என்ற 18 வயது பெண்ணையும் காக்கிச் சட்டை கருங்காலிகள் விடவில்லை. அந்தப் பெண்கூறுகையில், என்னிடம் வந்த போலீசார் நீ ரொம்ப அழகா இருக்கே என்று கூறிக் கொண்டே உடைகளைஉரித்தனர். நான் தப்பிக்க முடியவில்லை. என்னை கற்பழித்து விட்டனர் என்றார்.
மேலும் பல பெண்களிடமும் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டுள்ளனர். இது குறித்துத் தட்டிக் கேட்ட 11 பேரைபொய் கேஸ் போட்டு சிறையில் தள்ளியுள்ளனர்.
காவல் நிலையத்தில் நடந்துள்ளதாகக் கூறப்படும் இச் சம்பவம் தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவைஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும்பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், தவறு செய்த காக்கிச் சட்டைக் கும்பல் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந் நிலையில் கல்வியமைச்சர் தம்பிதுரை இன்று தர்மபுரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். அவரிடம்நிருபர்கள் இது குறித்துக் கேட்டபோது, இச் சம்பவம் குறித்து விசாரிக்கப்படும். தவறு செய்தவர்கள் மீது நிச்சயம்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications