அக்னி நட்சத்திரத்தை அடித்து விரட்டிய மழை
சென்னை:
"கத்திரி" வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கினாலும், தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்து மக்களை மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த மாதம் 100 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவான வெப்பம், நேற்று 95.36 டிகிரியாகக்குறைந்திருந்தது. இதனால் கோடையின் வெப்பம் குறைந்து காணப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களாக சேலத்தைக் கொளுத்தி வந்த வெயில், நேற்றும் முற்பகல் வரை 97.16 டிகிரிபாரன்ஹீட் அளவைத் தொட்டது.
ஆனால் நேரம் செல்லச் செல்ல சேலம் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து பிற்பகலுக்குப் பின் இம்மாவட்டத்தின் பலபகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. இதனால் சேலம் மாவட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இதேபோல் திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களிலும் நேற்றுபரவலாக மழை பெய்தது.
மதுரையிலும் நேற்று யாரும் எதிர்பாரத வகையில் பலத்த மழை கொட்டியது. இதனால் பெரியார் பேருந்துநிலையத்தில் முழங்கால் உயரத்திற்கும் மேலாக தண்ணீர் தேங்கி, போக்குவரத்தில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.
அழகர் ஆற்றில் இறங்கும் சமயத்திலாவது மழை கொட்டும் என்று நம்பியிருந்த மக்களுக்கு கடந்தவெள்ளிக்கிழமை இரவுதான் அந்த அதிர்ஷ்டம் கிட்டியது.
மீனாட்சி அம்மன் கோவிலின் மேற்கு வாசல் வழியாக கோவிலுக்குள் புகுந்த மழை நீர், 16 கால் மண்டபத்தில்அப்படியே தேங்கி நின்றது.
மதுரை புறநகர்ப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. அக்னி நட்சத்திரத்தின் முதல் நாளே கன மழைபெய்திருப்பதால் வெயிலை எதிர்பார்த்து பயந்து போயிருந்த மதுரை மக்கள் படு மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்தத் தொடர் மழையால் தென் மாவட்டங்களில் உள்ள பல ஏரிகளும் அணைவளும் மளமளவென்று நிரம்பஆரம்பித்துள்ளன.
பெங்களூரிலும் நேற்றும் இன்றும் வெயிலின் கொடுமை குறைந்து, மேக மூட்டமும் குளுமையான காற்றும்மக்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்துள்ளது.












Click it and Unblock the Notifications