குஜராத் கண்டன தீர்மானம்: ராஜ்யசபாவில் நிறைவேற்றம்
டெல்லி:
குஜராத் விவகாரம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் இன்று ராஜ்யசபாவில் மத்திய அரசின்ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அர்ஜூன் சிங் இந்தத் தீர்மானத்தை முன் மொழியஅன்று நள்ளிரவு வரை விவாதம் நீடித்தது.
பின்னர் மறுநாளும் தொடர்ந்த இந்த விவாதம், அன்றும் முடிவுக்கு வராமல் திங்கள்கிழமையான இன்றைக்கும்தொடரும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தொடர்ந்து ராஜ்யசபாவில் நடந்த குஜராத் விவகாரம் தொடர்பான விவாதத்தின்போது பிரதமர்வாஜ்பாய் குறுக்கிட்டுப் பேசினார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைப் பதவியிலிருந்து நீக்குவதால் மட்டும் அங்கு அமைதி ஏற்பட்டு விடும் என்றுகூற முடியாது என்று கூறிய வாஜ்பாய், மதக் கலவரம் எந்த வடிவில் இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கது என்றுபேசினார்.
அரசியல் சட்டத்தின் 355வது பிரிவை குஜராத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய அவசியமும் இப்போது அங்குஏற்பட்டிருக்கவில்லை என்றும் வாஜ்பாய் கூறினார்.
தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ள விவாதங்களே குஜராத் அரசுக்குத் தரப்பட்டிருக்கும் ஒரு நோட்டீஸ்மாதிரிதான் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து குரல் ஓட்டெடுப்பு மூலம் எதிர்க் கட்சிகளின் தீர்மானம் ராஜ்யசபாவில் நிறைவேறியது.
ராஜ்யசபா உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற உதவியதற்காக அவையின்தலைவரும் துணை ஜனாதிபதியுமான கிருஷ்ண காந்த் அனைவரையும் பாராட்டினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications