முஸ்லீம் திருமணங்களில் ஓட்டு வேட்டையை துவக்கினார் நாகூர் ஹனீபா
Subscribe to Oneindia Tamil
வாணியம்பாடி:
வாணியம்பாடி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் பிரபல பாடகரான நாகூர் ஹனீபா தனது தேர்தல்பிரசாரத்தைத் தொடங்கி விட்டார்.
"இசை முரசு" என திமுகவினரால் அன்புடன் அழைக்கப்படும் நாகூர் ஹனீபா, அக்கட்சியின் சார்பில் வாணியம்பாடிதொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
அவர் தனது பிரசாரத்தை நேற்று (திங்கள்கிழமை) தொடங்கினார். ஆனால் இன்னும் அவர் வேட்புமனுவே தாக்கல்செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்பூர் பகுதியில் உள்ள சில மசூதிகளில் நடந்த சில திருமண விழாக்களில் கலந்து கொண்ட நாகூர் ஹனீபா அங்குவந்திருந்த முஸ்லீம்களிடம் ஓட்டு வேட்டையாடினார்.
நாகூர் ஹனீபாவுடன், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் சென்றனர்.












Click it and Unblock the Notifications