பகல் கொள்ளை அடிக்கும் ஆளும்கட்சிப் பிரமுகர்
சேலம்:
சேலத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் வரி என்ற பெயரில் பெரும் கொள்ளை அடித்து வருகிறார்.
சேலம் போஸ் மைதானத்தில் நிறுத்தப்படும் சரக்கு வேன் மற்றும் மினி லாரிகளிடமிருந்து வரி வசூல் செய்யும் உரிமையை அதிமுகபிரமுகர் ஏலத்தில் எடுத்தார்.
போஸ் மைதானத்தில் பொதுக்கூட்டம், கண்காட்சி போன்றவை நடத்தும் நாட்கள் தவிர மற்ற நாட்களின் அங்கு நிறுத்தப்படும்நான்கு சக்கர வாகனங்கள் ஒவ்வொன்றிடமும் 5 ரூபாய் மட்டும் ஓராண்டுக்கு வசூலிக்கும் உரிமையை மாநகராட்சி ஏலம் விட்டது.அந்த ஏலம் அதிமுக பிரமுகர் பாலகிருஷ்ணனால் எடுக்கப்பட்டது.
இவர் நான்கு சக்கர வாகனங்களிடம் மட்டும் தான் வரி வசூல் செய்யலாம். ஆனால் தள்ளுவண்டிகளைக் கூட விடாமல் பணம்பறித்து வருகிறார். தள்ளுவண்டியில் மாட்டுக்றி, கோழிக்கறி, பொரி விற்க வரும் வியாபாரிகளிடம் 8 ரூபாயும், துணி விற்கவருபவர்களிடம் 10 ரூபாயும், பழக்கடைகளில் 20 ரூபாயும் தினப்படி வசூலித்து வருகிறார் இவர்.
இவருக்கு யார் இந்த அதிகாரம் தந்தது என்று தெரியவில்லை. இதற்கு பில்லும் கொடுப்பது கிடையாது.
இது மட்டுமில்லாமல் அங்கு விற்க வரும் ஒவ்வொருவரிடமும், வரி என்று கூறி பணத்தை பிடுங்கி வருகின்றனர் இவரது கைக்கூலிகள். வண்டி கடைகள், புத்தக கடைகள், லாட்டரி சீட்டு, நுங்கு விற்பவர்கள் என்று யாரையும் விட்டுவைக்கவில்லை. இவ்வாறுதினமும் ஆயிரக்கணக்கில் அடுத்தவர் உழைப்பை சுரண்டி வருகிறார்.
வரி கொடுக்க மறுக்கும் வியாபாரிகளை மிரட்டி வசூல் செய்யும் திறமையும் இந்தக் கும்பலிடம் உண்டு. இதுமட்டுமின்றி, தீபாவளிநேரத்தில் போடப்படும் திடீர் கடைகளில் 50 ரூபாயிலிருந்து 100ரூபாய் வரை வசூலித்துள்ளனர். தீபாவளி நேரத்தில் மட்டுமேஇவர்கள் ஒரு லட்ச ரூபாய் வரை சம்பாதித்துள்ளனர்.
மேலும் ஒரு வருடத்திற்கு மூன்றரை லட்சம் ரூபாய் வரை சம்பாதித்துள்ளனர். சென்ற வருடம் திமுகவினர் சம்பாதித்ததை விட இந்தவருடம் நாம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற போட்டியில் அதிமுகவினர் அதிக ஏலத்தில் எடுத்துள்ளனர்.
இது குறித்து பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, கடந்த ஆண்டு 66,000 ரூபாய்க்கு போன ஏலத்தை இந்த முறை 1,30,500ரூபாய்க்கு எடுத்துள்ளோம். யாரையும் மிரட்டியோ, அச்சுறுத்தியோ பணம் வாங்கவில்லை. எவ்வளவு கொடுக்க முடியும் என்றுகூறுகிறார்களோ அதை மட்டுமே வாங்குகிறோம் என்றார்.
இது பற்றி மாநகர கமிஷ்னர் பால்சாமியிடம் கேட்டபோது, ஏலதாரர்கள் குறித்து ஏகப்பட்ட புகார்கள் வருகின்றன. 13ஆம் தேதிஅனைத்து ஏலதாரர்களும் கலந்து கொள்ளும் கூட்டத்தில் எச்சரிக்கை விடப்படும். அதை மீறுபவர்களுக்கு குத்தகை உரிமை ரத்துசெய்யப்படும் என்று தெரிவித்தார்.
ஒரே நாளில் கணக்கில் காட்டாமல் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் இவர் மீது வருமான வரித்துறை, வணிக வரித்துறையினர்நடவடிக்கை எடுப்பார்களா?
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய வரி vs பழைய வரி முறை: ₹15 லட்சம் முதல் ₹30 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு எது பெஸ்ட்? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications