நான் சர்க்கஸ் ரிங் மாஸ்டர் மாதிரி: ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிகாரிகளிடமிருந்து வேலை வாங்க சர்க்கசில் வரும் ரிங் மாஸ்டர் மாதிரி நான் செயல்பட வேண்டியுள்ளது என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சட்டசபையில் அவர் பேசியதாவது:

1996ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் பல அதிகாரிகளை அனாவசியமாக பழிவாங்கினார்கள். பல அதிகாரிகளை செய்யாத தவறுக்கு கிரிமினல் வழக்கு போட்டு சிறையில் தள்ளினார்கள்.

இதனால், அதிகாரிகளின் உற்சாகம் முழுவதுமாகக் குறைந்து போனது. அவர்களின் மன தைரியம் குலைந்தது.

நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதிகாரிகளிடம் பணி புரியும் ஆர்வமேஇல்லை என்பது தெரிந்தது. நான் 1991ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது அதிகாரிகள் காட்டிய வேகமும் ஆர்வமும்பிரம்மிக்க வைத்தது.

அதையெல்லாம் திமுக ஆட்சி குலைத்திருந்தது. ஆனால், கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது அதிகாரிகளின்மனதில் உற்சாகமில்லை. இது என்னை அதிர்ச்சிக்குள்ளாகியது.

இப்போது அதிகாரிகளின் மன ஓட்டத்தை சரி செய்ய என்னால் முடிந்த அளவுக்குப் பாடுபட்டு வருகிறேன்.நிலைமை ஓரளவுக்கு சீராகத் தொடங்கியது. ஆனால், நான் கடந்த செப்டம்பரில் பதவி விலக நேரிட்டது.

சிறிது காலம் நான் இல்லாததைப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரிகள் மீண்டும் பழைய நிலைக்கேபோய்விட்டனர். என்னவோ நீண்ட விடுமுறையில் இருப்பது மாதிரி தான் அவர்களின் செயல்பாடு இருந்தது. திமுகஆட்சியில் இவர்கள் இப்படித் தான் இருந்தார்கள்.

இப்போது நிலைமையை சீராக்கி அவர்களிடம் வேலை வாங்க நான் சர்க்கஸ் ரிங் மாஸ்டர் போல செயல்படவேண்டியுள்ளது என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+