ஊட்டியில் ஜனாதிபதிக்கு ஆயுர்வேத சிகிச்சை
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
கோடையை முன்னிட்டு ஊட்டிக்கு ஓய்வெடுக்க வந்துள்ள ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு சிறப்பு ஆயுர்வேத சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று காலை தனி விமானம் மூலம் கோவை வந்து சேர்ந்த ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம்ஊட்டி வந்து சேர்ந்தார். தமிழக அரசின் விருந்தினர் இல்லத்தில் தங்கியுள்ளார் நாராயணன்.
அவர் ஊட்டியில் 15 நாட்கள் தங்கியிருப்பார். பல்வேறு நிகழச்சிகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
அவருக்கு கோவை கோட்டக்கல் ஆயுர்வேத வைத்திய சாலையைச் சேர்ந்த நிபுணர்கள் சிறப்பு சிகிச்சையும் அளித்து வருகின்றனர்.
ஜனாதிபதி ஊட்டியில் இருப்பதையொட்டி, மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள்வரும் பேருந்துகள் பலத்த சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications