ஸ்டாலினுக்கு எதிராக இன்னொரு சட்டம் தயார்
சென்னை:
மேயர், துணை மேயர் ஆகியோர் அரசின் அனுமதி பெறாமல் வெளிநாடுகளுக்குச் சென்றால் அவர்களைத்தண்டிக்க வகை செய்யும் சட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்படவுள்ளது.
முதலில் மேயர் பதவியில் இருப்பவர்கள் எம்.எல்.ஏவாக இருக்கத் தடை செய்யும் சட்டத்தைக் கொண்டு வந்தனர்.
இப்போது இந்தச் சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வருகிறார். இவை இரண்டுமே திமுக தலைவர் கருணாநிதியின்மகன் ஸ்டாலினைக் குறி வைத்துக் கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்களாகும்.
மேயர், துணை மேயர் ஆகியோர் அரசின் அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல வேண்டும் என்பதைகட்டாயமாக்கும் சட்ட மசோதாவை இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் துரைராஜ் சட்டசபையில் தாக்கல் செய்தார்.
சென்னை மேயர் ஸ்டாலின் பலவித எதிர்ப்புகளையும் மீறி பிரேசில் நாட்டில் நடக்கும் ஒரு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றார். மேம்பால ஊழல் வழக்கு இருப்பதால் சி.பி.சி.ஐ.டி. அனுமதியைப் பெற வேண்டும்,நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என அதிமுக துணை மேயர் கராத்தே தியாகராஜன் கூறி வந்தார்.
ஆனால், எதையும் கண்டுகொள்ளாமல் ஸ்டாவின் பிரேசில் சென்றுவிட்டார்.
இதையடுத்து இந்தப் புதிய சட்டத்தை ஜெயலலிதா அரசு கொண்டு வந்துள்ளது.
இதுவரை மேயர்கள் வெளிநாடு செல்லும்போது அரசுக்கு தகவல் தெரிவித்தால் மட்டும் போதும் என்பது மரபாகஇருந்து வருகிறது.
இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் அரசின் அனுமதியை வாங்கிக் கொண்டு தான் மேயர் வெளிநாடு செல்ல முடியும்.
இது உள்ளாட்சியின் முக்கியப் பதவிகளில் இருக்கும் எல்லோருக்கும் பொறுந்தும்.
சில வாரங்களுக்கு முன்பு தான் உள்ளாட்சிப் பதவிகளில் இருப்பவர்கள் எம்.எல்.ஏவாக இருக்க முடியாது என்றுசட்ட மசோதா கொண்டு வந்து அதை சட்டசபையில் நிறைவேற்றினார் ஜெயலலிதா.
இதன் மூலம் ஸ்டாலினை மேயர் பதவி அல்லது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டியநிர்பந்தத்துக்குத் தள்ள திட்டமிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு திமுக கோரிக்கை:
இந்தச் சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் கையெழுத்திட்டால் தான் இதுசட்டமாகும். அபபோது தான் ஸ்டாலினுக்கு தலைவலி வரும்.
இந் நிலையில் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் தரக் கூடாது என்று கோரி திமுக மற்றும் பா.ம.க. எம்.பிக்கள் இன்றுகூட்டாக ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று மனு கொடுத்தனர்.
ஜனாதிபதி ஊட்டியில் இருப்பதால் இந்த மனுவை அவரது செயலாளரிடம் தந்தனர். அவர் உடனே இதனைஜனாதிபதிக்கு பேக்ஸ் செய்வதாக உறுதியளித்ததாக திமுக எம்.பிக்கள் தெரிவித்தனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்துறை அமைச்சர் அத்வானி, ச்டட அமைச்சர் அருண் ஜேட்லியையும் திமுகமற்றும் பா.ம.க. எம்பிக்கள் சந்தித்தனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications