மதுரை, கோவைக்கு ஜூன் முதல் பி.எஸ்.என்.எல். செல்போன்கள்
மதுரை:
தொலைபேசித் துறையின் பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) மொபைல் போன்கள் வரும் ஜூன் மாதம் முதல் மதுரை,கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் செயல்படத் தொடங்கும் என்று மதுரை மண்டல பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் சுப்பையாதெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜூன் மாதம் முதல் மதுரை, திருப்பூர், கோவை நகர்களில் மொபைல் போன்கள்செயல்படத் தொடங்கும். இதற்கான ஐ.டி. எண் 98800 என முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 15,000 இணைப்புகள் தரப்படும்.
மதுரையைப் பொருத்தவரை, மதுரை மாநகர், மேலூர், திருமங்கலம், அம்மயநாயக்கனூர், கம்பம், திண்டுக்கல், ரெட்டியார் சத்திரம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், பழனி, கொடைக்கானல், தேனி, ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மொபைல் போன் வசதி வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே ஏர் டெல், ஏர் செல், பி.பி.எல், ஆர்.பி.ஜி ஆகிய நிறுவனங்களின் மொபைல் போன்கள் செயல்பட்டு வருகின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது.
லஞ்சம்: விருதுநகர் அதிகாரி கைது:
இந் நிலையில் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் நிறுவனத்தின் விருதுநகர் பிரிவு துணைப் பொது மேலாளர் ரெனின் ரூ. 8,000 லஞ்சம்வாங்கியதாக சி.பி.ஐ. அதிகாரிரிகளால் கைது செய்யப்பட்டார்.
மதுரையைச் சேர்ந்த பெஸ்ட் கம்ப்ரின்ட் பார்ம்ஸ் என்ற நிறுவனத்தின் தொலைபேசி பில் பிரச்சினையை சரி செய்வதற்காக ரூ. 8,000தருமாறு அந்த நிறுவனத்தின் அதிகாரி ரமேசிடம் கேட்டுள்ளார் ரெனின். இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு ரமேஷ் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் யோசனைப்படி நம்பர்கள் குறிக்கப்பட்ட ரூபாயை ரெனினிடம் ரமேஷ் கொடுத்தார். அப்போதுமறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் ரெனினைக் கைது செய்தனர்.
ரெனின் வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அங்கிருந்து ரூ. 3 லட்சம் பணம் மற்றும் பல்வேறு தஸ்தாவேஜுகளையும் பறிமுதல்செய்தனர்.












Click it and Unblock the Notifications