காங்.- த.மா.கா. இணைப்புத் தேதி: நாளை அறிவிப்பு
டெல்லி:
காங்கிரஸ்-த.மா.கா. இணைப்பு குறித்த இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நாளை சென்னையில் நடக்கிறது.
ஏற்கனவே இணைப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசிவிட்டார் த.மா.கா.தலைவர் வாசன். இணைப்புக்கான தேதி, இடம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் தலைவர்களான ஆஸ்கர்பெர்னாண்டஸ், ரமேஷ் சென்னிதலா ஆகியோர் இன்று சென்னை வருவதாக இருந்தது.
ஆனால், கோவாவில் துணை முதல்வர் நாயக் பா.ஜ.கவிலிருந்து விலகியதோடு மட்டுமல்லாமல் தனதுபதவியையும் ராஜினாமா செய்துவிட்டார். இதனால் பா.ஜ.க. கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு மாற்று ஆட்சி அமைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்டசில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கோவா தலைநகர் பனாஜிக்கு விரைந்துள்ளனர்.
இதையடுத்து அவர்களின் சென்னை பயணம் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது. அவர்கள் நாளை தான் சென்னைவருகின்றனர்.
அப்போது இரு கட்சிகள் இணைப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இணைப்புக்கான தேதியும் இடமும்அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications