களங்கத்தைத் துடைக்க கருணாநிதியின் புதிய "டிரிக்"
சென்னை:
இடைத் தேர்தல் நடக்கவுள்ள சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதியில் அதிகாரபூர்வ திமுக வேட்பாளர்களைஎதிர்த்து போட்டி வேட்பாளராக திமுகவின் மிக முக்கியப் பிரமுகரான செங்கை சிவம் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதன்பின்னணி குறித்து மிக சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.
காலையில் சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியத்துக்கு எதிராக வேட்பு மனுத் தாக்கல் செய்த இவர்உடனடியாக காரில் வாணியம்பாடி பறந்தார். பகல் 2.40 மணிக்கு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த இவர் தேர்தல் அதிகாரிசங்கரனிடம் திமுக வேட்பாளராக வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இங்கு திமுக சார்பில் இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா தான்நிறுத்தப்பட்டுள்ளார்.
இது திமுகவினரை குழப்பத்தில் ஆழ்த்தியது. இது தொடர்பாக முதலில் கருணாநிதி கூட டென்சன் ஆனது மாதிரி காட்டிக்கொண்டார். இந்தத் தகவல்கள் உளவுத்துறை மூலம் அதிமுக தலைமைக்கு எட்டியது. இதனால் திமுகவில் குழப்பம் என்றமகிழ்ச்சியில் அதிமுக திளைத்தது.
ஆனால், செங்கை சிவத்தை போட்டியிட வைத்துள்ளதே திமுக தலைவர் கருணாநிதி தான் என்பது நமது நிருபரின் விசாரணையில்தெரியவந்துள்ளது.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான செங்கை சிவம் பெரம்பூர் தனித் தொகுதி எம்.எல்.ஏவாக 2 முறைதேர்ந்தெடுக்கப்பட்டவர். திமுகவின் முக்கியத் தளபதிகளில் ஒருவர். ஸ்டாலினுக்காக எதையும் செய்யத் தயங்காதவர்.
திமுக ஆட்சிக்காலத்தில் இவர் வீட்டு வசதி வாரிய இணைத் தலைவராக இருந்தார். பெரம்பூர் பகுதி திமுக செயலாளராகவும்இருக்கிறார். கடந்த பொதுத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை எதிர்த்துப்போட்டியிட்டுத் தோற்றார்.
திமுகவின் 2-வது வரிசை தலைவர்களில் ஒருவராக திகழும் இவர் கலைஞரிடமும் மிகுந்த செல்வாக்குப் படைத்தவர்.
இந் நிலையில் திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்து நேற்று செங்கை சிவம் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது திமுகவட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சைதாப்பேட்டையில் வேட்பு மனுத்தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த செங்கை சிவத்தை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டுதிமுக சார்பில் மா.சுப்பிரமணியனும், மாற்று வேட்பாளராக துரையும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். நீங்கள் எதற்கு மனுசெய்துள்ளீர்கள் என்று கேட்டபோது, இதுகுறித்துக் கருத்துக் கூற விரும்பவில்லை என்று கூறி விட்டு வெளியேறி விட்டார் செங்கைசிவம்.
செங்கை சிவத்தின் திடீர் போட்டி குறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்துப் பார்த்தபோது, கருணாநிதியின் ராஜதந்திரம்தெரியவந்தது.
கடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 4 தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் நான்குதொகுதிகளிலும் அவரது வேட்பு மனுக்கள் நிராாகரிக்கப்பட்டன. இதை திமுகவின் சதிச் செயல் என அதிமுக அப்போது பிரசாரம்செய்தது. இதை கருணாநிதி எவ்வளவோ மறுத்தும் கூட அதை தமிழக மக்கள் நம்பவில்லை.
ஜெயலலிதாவை போட்டியிட விடாமல் கருணாநிதி தடுத்துவிட்டார் என்ற கருத்து தான் இன்று வரை நிலவி வருகிறது.
ஜெயலலிதாவின் இந்தப் புகாரை பொய் என்று நிரூபிக்கும் வகையிலேயே இப்போது நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் செங்கைசிவத்தை 3 தொகுதிகளிலும் (சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிரபாக்கம்) வேட்பு மனுத்தாக்கல் செய்ய வைத்துள்ளது திமுகதலைமை என்று அந்த பரபரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தட்ஸ்தமிழ். காம் செய்தியாளரிடம பேசிய கருணாநிதிக்கு மிக நெருக்கமான திமுக முக்கியப் பிரமுகர் ஒருவர் கூறுகையில்,அதிமுகவின் பிரசாரம் பொய்யானது என்பது இப்போது நிரூபணமாகப் போகிறது.
2 தொகுதிகளுக்கு மேல் ஒருவர் போட்டியிட்டால் அவரது வேட்பு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடியாகி விடும். இப்போதுசெங்கை சிவம் 2 தொகுதிகளிலும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். அச்சிறுப்பாக்கத்திலும் அவர் வேட்பு மனு தாக்கல்செய்வார்.
எனவே அவரது 3 மனுக்களும் தள்ளுபடியாகி விடும். இதன் மூலம் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் தள்ளுபடியானதில் திமுகமீது எந்தத் தவறும் இல்லை என்பதை மக்களுக்கு கருணாநிதி சுட்டிக் காட்டுவார். திமுக மீதுள்ள தவறான களங்கம்துடைக்கப்படும் என்றார்.
திமுக தலைமையின் ஆலோசனைப்படியே செங்கை சிவம் 3 தொகுதிகளிலும் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications