நள்ளிரவில் கடலில் தப்பிய கொள்ளையனை மடக்கிப் பிடித்த மக்கள்
சென்னை:
சென்னை நகரில் நேற்றும் 3 இடங்களில் தொடர் கொள்ளைகள் நடந்தன. ஒரு கொள்ளையனும் பிடிபட்டான்.
பெசன்ட் நகரில் 35வது தெருவில் வசித்து வருபவர் மலைக் கண்ணன். நேற்று இரவு இவரது வீட்டுக்குள் ஒருகொள்ளையன் புகுந்தான். வீட்டில் இருந்த 40 சவரன் நகை, வீடியோ கேமரா, பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு கிளம்பினான்.
அப்போது சத்தம் கேட்டு எழுந்த மலைக் கண்ணனின் வீட்டினர் அவனை விரட்டினர். அருகில் இருந்த பொதுமக்களும் சத்தம் கேட்டு எழுந்து கொள்ளையனை விரட்டிச் சென்றனர்.
பீச் பக்கமாக ஓடிய அந்தக் கொள்ளையன் ஒரு படகில் ஏறித் தப்பினான். இதையடுத்து அப் பகுதி மீனவர்களும்பொது மக்களும் பல படகுகளில் அந்தக் கொள்ளையனை விரட்டிச் சென்றனர்.
கடலில் வைத்து அவனை வளைத்துப் பிடித்து அடித்து இழுத்து வந்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில்அவனது பெயர் குணா என்பதும் பெசன்ட் நகரில் உள்ள ஊரூர் குப்பத்தைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து பொது மக்களே அவனை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பொது மக்கள் அடித்தஅடியில் கொள்ளையன் குணா நைந்து போன சாக்குத் துணி மாதிரி ஆகிவிட்டான். அவனை அள்ளிப் போய் தான்காவல் நிலையத்தில் போட்டனர்.
சென்னையில் நடந்துள்ள கொள்ளைகளில் முக்கியக் கொள்ளைகள் பெசன்ட் நகரில் தான் நடந்து வந்தன. இங்குஇந்தியன் பாங்கில் கேஷியரைக் குத்திக் கொன்றுவிட்டு பணம் கொள்ளையடிக்கும் கொள்ளை நடந்தது. அதேபோல இன்னொரு வங்கி ஊழியரின் வீட்டிலும் கொள்ளை நடந்தது.
மேலும் 2 இடங்களில்...
பெசன்ட் நகர் தவிர வடபழனி அம்மன் கோவில் தெருவில் இரண்டு வீடுகளில் கொள்ளை நடந்தது. சுமார் ரூ. 1 லட்சம் மதிப்புள்ளநகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications