ரயில்களில் அதிரடி சோதனை: பிடிபட்டனர் 450 ஓசி கிராக்கிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 450 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 1 லட்சம்அபராதம் வசூலிக்கப்பட்டது.

சென்னைப் புறநகர் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பது வெகு சாதாரணமான விஷயமாகிவிட்டது. இதனால்அவ்வப்போது டிக்கெட் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில் சென்னை முதல் அரக்கோணம் இடையிலான ரயில்நிலையங்களில் நேற்று முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

அனைத்து ரயில் நிலையங்களிலும் டிக்கெட் பரிசோதகர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். இதுதவிர ஓடும் ரயில்களிலும் பரிசோதகர்கள்குவிக்கப்பட்டனர். ரயிலிலிருந்து இறங்கியவர்கள், பயணித்தவர் என ஒருவரையும் பரிசோதகர்கள் விடவில்லை.

மொத்தம் 220 டி.டி.இக்கள் இந்தப் பரிசோதனையில் ஈடுபட்டனர்.

தப்பியோடி... விரட்டிப் பிடித்து...

இந்த அதிரடி சோதனையில் 450 பேர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ரூ. 1 லட்சம்அபராதம் வசூலிக்கப்பட்டது. டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த பலர் தப்பியோட முயன்றனர்.

அவர்களை பரிசோதகர்களும், டிக்கெட் வாங்கி பயணம் செய்த பயணிகளும், போலீஸாரும் துரத்திப் பிடித்தனர்.

இந்தியா முழுவதும்...

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டில் 1.40 கோடி பேர் ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்துபிடிபட்டுள்ளதாக நேற்று தான் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இவர்களிடம் இருந்து ரூ. 181.50 கோடிஅபராதமாக வசூலிக்கப்பட்டதாக ரயில்வேதுறை இணையமைச்சர் ராஜகோபால் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

இவ்வாறு பிடிபட்ட பிராடுகளில் 8,756 பேர் அரசியல் பிரமுகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+