மதுரையில் குடும்பங்களை சீரழித்து வரும் கந்து வட்டி கும்பல் அட்டகாசம்
மதுரை:
மதுரையில் அநியாய வட்டிக்கு கடன் கொடுத்துவிட்டு, அந்த பணத்தை கேட்டு மிரட்டிய 14 பேரை போலீசார்கைது செய்துள்ளனர்.
கட்டடத் தொழிலாளர்கள், தறி நெசவுத் தொழிலாளர்கள் உள்பட அடிமட்டத் தொழிலாளர்கள் நிறைந்த நகரம்மதுரை. இந்தத் தொழிலாளர்கள் வேலை இல்லாத நாட்களில் வட்டிக்குக் கடன் வாங்கி குடும்பத்தை ஓட்டுவதுவாடிக்கை.
இதை சாக்காக வைத்து மதுரை முழுவதுமே பெரும் அளவிலான வட்டிக்குப் பணம் கொடுக்கும் கும்பல்கள்எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மிக அநியாய வட்டி வசூல் செய்யும் இந்தக் கும்பல்களிடம் சிக்கி நடுத்தெருவுக்கு வந்துள்ள குடும்பங்களின்எண்ணிக்கை கணக்கில் அடங்காது.
கந்து வட்டி, டெய்லி வட்டி தவிர மீட்டர் வட்டி என்ற பெயரில் ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு வட்டிஎன்றெல்லாம் வசூவித்து வருகின்றனர்.
பெரும்பாலும் ரவுடிகள் தான் இந்த வட்டிக் கடைகளை நடத்தி வருகின்றன. பணம் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்ததாமதமாகும்போது அந்தக் குடும்பங்கள் இந்தக் கும்பல்களிடம் சிக்கி படும்பாடு கண்ணீரை வரவழைத்துவிடும்.
கடன் வாங்கிய நபரின் வீட்டுக்குள் கும்பலாக நுழைந்து நடு வீட்டில் உட்கார்ந்து கொள்வது, நடு வீட்டில்உட்கார்ந்து தண்ணி அடிப்பது, இரவில் மோசமான பெண்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைவது,உச்சகட்டமாக வீட்டுப் பெண்களையே மோசமாகப் பேசி கையைப் பிடித்து இழுப்பது, பணம் தர முடியலையா உன்பொண்ணை அனுப்பு என்று கேவலமாகப் பேசுவது என இந்தக் கும்பல்கள் செய்யும் அட்டகாசம் சொல்லிமாளாது.
பல போலீஸ்காரர்களே பினாமிகளாக இப்படிப்பட்ட வட்டிக் கடைகளை நடத்துகின்றனர். இதனால், அடாவடிசெய்யும் ரவுடிகள் மீது போலீசார் நடவடிக்கையும் எடுப்பதில்லை.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் அருகே ஒரு முக்கிய ஹோட்டல் உரிமையாளர் இது போன்ற கும்பலிடம்பணம் வாங்கிவிட்டு மாட்டிக் கொண்டார். இதையடுத்து அவரது கடையில் வட்டிக் கும்பலைச் சேர்ந்த 20, 30 பேர்தினமும் போய் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் திரும்பிச் செல்ல ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் தினமும்கல்லாவில் வரும் பணத்தை தனது ஆட்களை விட்டு அள்ளிச் சென்றது இந்தக் கும்பல். விளைவு அந்தஹோட்டலையே இந்தக் கும்பலிடம் தந்துவிட்டு நடுத்தெருவுக்கு வந்துவிட்டார் அதன் உரிமையாளர்.
இந்த வட்டிக் கடைகள் அரசுக்கு எந்த வரியும் செலுத்துவது இல்லை. இவர்கள் கொடுத்து வாங்கும் பணம்எல்லாமே பிளாக் மணி தான்.
இவர்களிடம் சிக்கிய எத்தனையோ ஏழைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு அரசியல் செல்வாக்கு, ஜாதி செல்வாக்கு இருப்பதால் இதுவரை இவர்களை போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர்.
ஆனால், இப்போது மதுரை போலீஸ் கமிஷ்னராகியுள்ள சூர்ய பிரகாஷ் இந்தக் கும்பல்களை அடக்கஆரம்பித்துள்ளார்.
அநியாய வட்டிக்குப் பணம் கொடுத்துவிட்டு வட்டி கட்ட முடியாத ஏழைகளை மிரட்டி வருபவர்களை ரவுடிகள்என்று அழைக்கும் இவர், அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்.
இதுவரை 14 அநியாய வட்டிக் காரர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில்அடைத்துள்ளார் இந்த அதிகாரி.
இது போல மேலும் 200 புகார்கள் வந்துள்ளதாகவும் அனைத்துப் புகார்களும் உரிய முறையில் விசாரிக்கப்பட்டுநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அதே போல மதுரை ஆட்டோ டிரைவர்களின் அட்டூழியத்தையும் அடக்க ஆரம்பித்துள்ளார். இதுவரை மீட்டர்போடாமல் தான் மதுரையில் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றனர். இதனால், ஆட்டோக்காரர்கள் மிக அதிகமானகட்டணம் வசூலித்து பயணிகள் வயிற்றில் அடித்து வருகின்றனர்.
இதையடுத்து ஆட்டோக்களில் மீட்டர் பொறுத்தியே ஆக வேண்டும் என சூர்யபிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
இது போன்ற அதிகாரிகளால் தான் சாமானிய மக்கள் இன்னும் பிழைத்திருக்க முடிகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications