அண்ணா பல்கலைக்கு புதிய துணை வேந்தர் நியமனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அண்ணா பல்கலைக்கழகப் புதிய துணை வேந்தராக டாக்டர் ஈ. பாலகுருசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக ஆளுநரும் இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமாகிய ராமமோகன் ராவ், இன்று இதற்கான நியமனஉத்தரவில் கையெழுத்திட்டார்.

பெங்களூரில் உள்ள மஹாவீர் அகாடெமி ஆப் டெக்னாலஜி அண்ட் சைன்சஸ் என்ற நிறுவனத்தின் இயக்குநராகஇருந்துவரும் பாலகுருசாமி, அடுத்த மூன்றாண்டுகளுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகச் செயல்படுவார் என்று ராவ் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணை வேந்தராகிய டாக்டர் ஏ. கலாநிதியின் பதவிக் காலம்விரைவில் முடிவடையவுள்ளதையடுத்து, பாலகுருசாமியை அப்பதவியில் அமர்த்தியுள்ளார் ஆளுநர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும்என்று தமிழக அரசு அறிவித்த பிறகு, முதல் முறையாக இதன் துணை வேந்தராக பாலகுருசாமிநியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+